டிஜிட்டல் கைது முறைகேடு தொடர்புடைய 9,400 வாட்ஸ்- அப் கணக்கு முடக்கம்

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
டிஜிட்டல் கைது முறைகேடு தொடர்புடைய 9,400 வாட்ஸ்- அப் கணக்கு முடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்​டில் தொடர்ந்து நடை​பெறும் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் குறித்து உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்குப் பதிவு செய்​தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலை​மையி​லான அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்​கில் மத்​திய உள்​துறை அமைச்​சகம் சார்​பில் தலைமை வழக்​கறிஞர் ஆர்​.வெங்​கடரமணி, உச்சநீதி​மன்​றத்​தில் தற்​போதைய நிலை அறிக்​கையை தாக்​கல் செய்​துள்​ளார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: டிஜிட்​டல் கைது முறை​கேடு​களை தடுக்கத் தேவை​யான நடவடிக்​கைகளை தொலைத்​ தொடர்பு நிறு​வனங்​களும், இணை​ய தளங்​களும், வங்​கி​களும் எடுத்து வருகின்​றன. சிம் கார்​டு​களை விரை​வாக முடக்​கு​வது, வாட்​ஸ்- ​அப் பயனாளரை பயோமெட்​ரிக் முறை​யில் சரி​ பார்ப்​பது போன்றவை செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

டிஜிட்​டல் கைது முறை​கேட்​டில் பயன்​படுத்​தப்​பட்ட 9,400 கணக்குகளை வாட்​ஸ்- ​அப் முடக்​கி​யுள்​ளது. டிஜிட்​டல் கைது முறை​கேட்​டில் ஈடு​படும் நபர்​கள் பெரும்​பாலும் தெற்​காசிய நாடான கம்​போடி​யா​வில் இருந்து செயல்​படு​கின்​றனர். போலி பயனாளர்​களைத் தடுக்க, பயனாளர் பெயர்​களை காட்​டும் முறை கடந்த ஜனவரி முதல் நடை​முறைப்​ படுத்​தப் ​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

டிஜிட்டல் கைது முறைகேடு தொடர்புடைய 9,400 வாட்ஸ்- அப் கணக்கு முடக்கம்
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in