மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் பூமிக்கடியில் ரயில் பாதை: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் பூமிக்கடியில் ரயில் பாதை: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்​கள், மேற்​கு ​வங்​கத்தை இணைக்​கும் வகை​யில் சிலிகுரி பூமிக்​கடி​யில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்​கப்​படும் என்று ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​ வங்​கத்​தின் சிலிகுரி பாதை இந்​தி​யா​வின் பிர​தான பகுதியை​யும் வட கிழக்கு மாநிலங்​களை​யும் இணைக்​கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலை​வுடைய மிக குறுகிய பாதை ஆகும். இதன் இரு ​புற​மும் நேபாள, வங்​கதேச எல்​லைகள் அமைந்​துள்​ளன.

வடபகு​தி​யில் பூடான் எல்லை உள்​ளது. சீனா மற்​றும் வங்​க தேசத்​தால் சிலிகுரி பாதைக்கு தொடர்ந்து அச்​சுறுத்​தல் நீடிக்​கிறது. இதை எதிர்​கொள்ள அங்கு பூமிக்​கடி​யில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்​யப்​பட்​டிருக்​கிறது.

இதுதொடர்​பாக ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் காணொலி வாயி​லாக நேற்று செய்தியாளர்களிடம் கூறி​யிருப்​ப​தாவது: வடகிழக்கு மாநிலங்​களை​யும் இந்​தி​யா​வின் பிர​தான பகு​தி​யை​யும் இணைக்​கும் வகை​யில் சிலிகுரி பாதை​யில் 40 கி.மீ. தொலை​வுக்கு பூமிக்​கடி​யில் ரயில் பாதை அமைக்​கப்பட உள்​ளது.

பாது​காப்​பு ரீ​தி​யாக இது மிக​வும் முக்​கிய​மான திட்​ட​மாகும். மேலும் தற்​போது இந்த வழித்​தடத்​தில் உள்ள ரயில் தடத்​தை, 4 வழித்​தட​மாக மாற்​ற​வும் முடிவு செய்​யப்​பட்​டிருக்​கிறது. இவ்​வாறு அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​தார்​.

மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் பூமிக்கடியில் ரயில் பாதை: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ஆலயக் கட்சியிடம் சின்ன மகனுக்கு துண்டு போடும் சிட்டிங் பார்ட்னர் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in