டெல்லி செங்கோட்டை தாக்குதலின் பின்னணியில் ‘அல்-காய்தா’ - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தகவல்

டெல்லி செங்கோட்டை தாக்குதலின் பின்னணியில் ‘அல்-காய்தா’ - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2025 நவம்​பரில், ஹரியானாவின் பரி​தா​பாத் பகு​தி​யில் 2,900 கிலோ வெடிமருந்​துகளை காவல் துறை அதிகாரிகள் பறி​முதல் செய்​தனர். இந்த சதித்​திட்​டத்​தில் தொடர்புடைய டாக்​டர் முசம்​மில் ஷகீல், டாக்​டர் அடில் ரத்​தர் ஆகியோர் கைது செய்​யப்பட்டனர்.

இதனால் உமர் முகமது என்ற தற்​கொலைப்​படை தீவிர​வா​தி​யிடம் பெருத்த அச்​ச​மும், பதற்​ற​மும் ஏற்​பட்​டது. அவர் 2025 நவம்​பர் 10 அன்று டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டை வெடிக்​கச் செய்​தார். இந்​தத் தற்​கொலைத் தாக்​குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) விரி​வான விசா​ரணை நடத்​தி​யது. தீவிர​வா​தி​களின் சதித்​திட்​டம் மற்​றும் அதில் மருத்​துவ நிபுணர்​களின் பங்​களிப்பை என்ஐஏ அம்பலப்​படுத்​தி​யது. இந்த வழக்​கில் தொடர்​புடைய 10 பேருக்கு எதி​ராக அதி​காரி​கள் வழக்கு பதிவு செய்​தனர்.

இந்நிலையில், ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலின் ‘ஐஎஸ்​ஐஎஸ் மற்​றும் அல்​-​காய்​தா’ தடைக் குழு​விடம் பகுப்​பாய்வு மற்​றும் தடைகள் கண்​காணிப்​புக் குழு​வின் 38-வது அறிக்​கை​ சமர்ப்​பிக்கப்பட்டுள்ளது. அதில் டெல்​லித் தாக்​குதலுக்கு `இந்​திய துணைக் கண்​டத்​துக்​கான அல்​-​காய்​தா’ அமைப்பே காரணம் என்றும் அதி​காரப்​பூர்​வ​மாக உறு​திப்​படுத்​தி​யுள்​ளது. மேலும் அல்​-​காய்தா அமைப்பு பெரிய குழுக்​களாகச் செயல்​படு​வ​தில்​லை. அதற்​குப் பதிலாக, சிறிய மற்​றும் தனித்​தனி செல்​களாகத் தன் வலைப்​பின்​னலை அது விரிவுபடுத்தி வரு​கிறது.

வேதி​யியல் மற்​றும் உயி​ரியல் ஆயுதங்​களை உரு​வாக்க அந்த அமைப்பு தொடர்ந்து முயன்று வரு​கிறது. அண்டை நாடான வங்கதேச நிலப்​பரப்​பைப் பயன்​படுத்தி புதிய தீவிர​வாத அமைப்​பு​களை உரு​வாக்க அல்​-​காய்தா முயலக்​கூடும் என்​றும் ஐ.நா. எச்சரித்​துள்​ளது. இதன் மூலம், எல்லை தாண்​டிய தீவிர​வாதம் குறித்து இந்​தியா தொடர்ந்​து தெரி​வித்​து வந்​த கவலைகளை ஐ.நா. அறிக்​கை உறுதிப்படுத்தியுள்ளது.

டெல்லி செங்கோட்டை தாக்குதலின் பின்னணியில் ‘அல்-காய்தா’ - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தகவல்
மத்திய அரசின் கனிம வளங்கள் திருத்த மசோதாவால் தமிழகம் ரூ.3,200 கோடி வருவாய் இழக்கும் அபாயம்: தங்கம் தென்னரசு, கனிமொழி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in