“உலகளாவிய நெருக்கடிகளில் வலுவான தலைமைத்துவத்தை ஐ.நா. வெளிப்படுத்த வேண்டும்” - ஜெய்சங்கர்

“உலகளாவிய நெருக்கடிகளில் வலுவான தலைமைத்துவத்தை ஐ.நா. வெளிப்படுத்த வேண்டும்” - ஜெய்சங்கர்
Updated on: 
1 min read

புதுடெல்லி: ஐ.நா. தினத்தை முன்​னிட்டு டெல்​லி​யில் நடை​பெற்ற சின்​மயா அம்​ரித் மகோத்​சவ உல​களாவிய மாநாட்​டில் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: ஐ.நா. உல​களாவிய நெருக்கடிகளுக்கு ஒரு பார்​வை​யாளராக இல்​லாமல், வலு​வான தலை​மைத்​து​வத்தை வெளிப்​படுத்த வேண்​டும். தீவிர​வாதம் உலக அமைதிக்கு ஒரு பெரும் அச்​சுறுத்​தல்.

அதை அரச ராஜாங்க முடிவுகளின் ஒரு கரு​வியாக பயன்​படுத்​து​வது முற்​றி​லும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது. நிதி, எரிபொருள், உணவு மற்​றும் உரம் ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய “4எப் நெருக்கடியை” உலக தெற்கு நாடுகள் எதிர்​கொள்​கின்​றன.

இதற்​கான தீர்​வு​களைக் கண்​டறிவதில் வளர்ந்த நாடுகளுக்​கும் பங்கு உண்டு. சர்​வ​தேசப் பொருளாதா​ரத்​தில் உள்ள அபாயங்களைக் குறைக்​க அவசர நட​வடிக்​கைகள் எடுக்​கப்​பட வேண்​டும். செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உலகை மாற்றியமைக்கும். அதேவேளை​யில், அதன் வளர்ச்​சி​யையும் தாக்கத்​தையும் ஒரு சிலரின் கைகளில் விட்​டுவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

“உலகளாவிய நெருக்கடிகளில் வலுவான தலைமைத்துவத்தை ஐ.நா. வெளிப்படுத்த வேண்டும்” - ஜெய்சங்கர்
பெற்றோருக்கு ‘குறி’... வன்முறையைத் தடுக்க பிரான்ஸ், இத்தாலியின் புதிய உத்தி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in