பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி

பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி
Updated on: 
1 min read

புதுடெல்லி: நாடு முழு​வதும் பொது சிவில் சட்​டத்தை கொண்டுவர மத்​திய பாஜக அரசு முயற்​சித்து வரு​கிறது. திருமணம், விவாகரத்​து, வாரிசுரிமை, தத்து எடுத்​தல் ஆகிய​வற்றில் ஒவ்​வொரு மதத்​தினரும் வெவ்​வேறு வழி​முறை​களைப் பின்​பற்றி வரும் நிலை​யில், அவற்​றில் அனைத்து மதத்​தினரும் ஒரே வழி​முறையைப் பின்​பற்ற பொது சிவில் சட்​டம் வழி​வகை செய்​வ​தாக பாஜக தெரி​வித்​துள்​ளது.

அதே நேரத்​தில் இந்த சட்​டம் இந்​தி​யா​வின் பன்​முகக் கலா​சா​ரம் மற்​றும் மதச் சுதந்​திரத்​தைப் (பிரிவு 25) பாதிக்​கும் என்​றும், சிறு​பான்​மை​யினரின் தனி​நபர் சட்​டங்​களில் தலை​யிடு​வ​தாக அமை​யும் என்​றும் எதிர்க்​கட்​சிகள் மற்​றும் சில சிறு​பான்மை அமைப்​பு​கள் வாதிடு​கின்​றன. கோவா​வில் சுதந்​திரத்​துக்கு முன்​பிருந்தே பொது சிவில் சட்​டம் நடை​முறை​யில் உள்​ளது.

கோவாவுக்கு பிறகு, நாட்​டிலேயே முதல்​முறை​யாக பாஜக ஆளும் உத்​த​ராகண்​டில் கடந்த ஆண்டு இந்த சட்​டம் அமல்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்​து, சமீபத்​தில் குஜ​ராத் மற்றும் அசாம் மாநில சட்​டப் பேர​வை​களில் பொதுசி​வில் சட்​டம் தொடர்​பான மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டு, அவற்​றுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், பிரபல தனி​யார் பத்​திரி​கைக்கு பேட்​டியளித்த சட்டம், நீதி மற்​றும் நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறைகளுக்கான மத்​திய இணை அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்வால் கூறிய​தாவது: பொது சிவில் சட்​டம் அரசி​யலமைப்​புச் சபை​யில் விவாதிக்கப்பட்டது. மேலும், அரசி​யலமைப்பை உருவாக்கியவர்கள் 44வது பிரிவின் கீழ் அதற்​கான ஒரு விதி​யைச் சேர்த்​துள்​ளனர்.

உச்ச நீதிமன்ற​மும் இவ்​விஷ​யம் குறித்து பலமுறை கருத்​துகளைத் தெரி​வித்​துள்​ளது. சில மாநிலங்​கள் பொது சிவில் சட்​டத்​தைச் செயல்​படுத்த முன்​வந்​திருப்​பது ஊக்​கமளிக்​கிறது. கோவா​வில் பாஜக ஆட்​சி​யில் இல்​லாத காலத்​திலேயே நீண்ட கால​மாக பொது சிவில் சட்​டம் இருந்து வரு​கிறது.

பொது அரசி​யலமைப்​புச் சட்​டம் நாடு முழு​வதும் செயல்படுத்தப்பட வேண்​டும் என்று நாங்​கள் விரும்​பு​கிறோம், மேலும் இந்த நோக்​கத்​துக்கு எங்​கள் அரசு உறுதி​யுடன் உள்​ளது. இதற்கு அரசியலமைப்பு அடிப்​படை உள்​ளது. மேலும், இதன் அமலாக்​கம் ஒரு சில மாநிலங்​களுக்​குள் மட்​டும் கட்​டுப்​படுத்​தப்பட எந்​தக் காரணமும் இல்​லை. இந்த விவ​காரம் அரசி​யல் கட்சிகளின் தேர்தல் அறிக்​கை​களி​லும் அதி​கள​வில் இடம்​பெற்​று வரு​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி
சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

X