பிரதமர் ஜலந்தர் வரும் முன் 2 பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரதமர் ஜலந்தர் வரும் முன் 2 பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

சண்டிகர்: பதினைந்தாம் நூற்றாண்டு கவிஞரும் சமூக சீர்திருத்த வாதியுமான துறவி குரு ரவிதாஸ் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் அருகில் அவரது சமயப் பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள டேரா பல்லனுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார்.

இந்நிலையில் ஜலந்தர் நகரில் உள்ள 2 பள்ளிகளுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதில் டேரா பல்லனுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் இரு பள்ளிகளிலும் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டறியப்படவில்லை. நேற்று விடுமுறை என்பதால் மாணவர்கள் யாரும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடைபெறுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் ஜலந்தர் வரும் முன் 2 பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோளை ஏற்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நிறுத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in