மேற்கு வங்கத்தில் 25 ஆண்டுக்குப் பின் இரண்டு கட்டத் தேர்தலின் பலன் யாருக்கு?

மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே கட்​ட​மாக​வும், மேற்கு வங்​கத்​தில் 2 கட்​டங்​களாக​வும் தேர்​தல் நடை​பெறும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் நேற்​று​ முன்​தினம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்​கத்​தில் ஏப்​ரல் 23 மற்​றும் 29 ஆகிய தேதி​களில் 2 கட்டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இது மாநிலத்​தின் தேர்தல் வரலாற்​றில் 25 ஆண்​டுக்​குப் பிறகு முதல் முறை​யாகும்.

மேற்கு வங்​கத்​தில் 2006ம் ஆண்டு 5, 2011ம் ஆண்டு 6, 2016ம் ஆண்டு 7, 2021ம் ஆண்டு 8 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற்​றது. பிஹார், உ.பி.​யில் தேர்​தல் வன்​முறை​கள் அதி​க​மாக இருந்​தது போலவே மேற்கு வங்​கத்​தில் சூழல் நில​விய​தால் பல கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது.

எனினும், சில மாதங்​களுக்கு முன்பு நடை​பெற்ற பிஹார் சட்டப்பேர​வைத் தேர்​தலில், ஒரு வாக்​குச் சாவடி​யில் கூட மறுவாக்குப் பதிவுக்​கான அவசி​யம் ஏற்​பட​வில்​லை. மேற்கு வங்கத்​தி​லும் கடந்த பல தேர்​தல்​களில் வன்​முறை​கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக, மம்தா பானர்ஜி இடது​சாரி கட்​சிகளை எதிர்த்​துப் போட்டியிட்ட கால கட்​டத்​தில் பல அரசி​யல் படு​கொலைகள் நிகழ்ந்​தன. தற்​போது நிலைமை மாறி வன்முறை குறைந்துள்ளது. மேற்கு வங்​கத்​தில் 2 கட்ட தேர்​தல் நடத்த தேர்​தல் ஆணை​யம் முடி​வெடுத்​திருப்​ப​தற்கு இதுவே முக்​கிய காரணம்.

மேலும், மேற்கு வங்​கத்​தில் 480 கம்​பெனி துணை ராணுவப் படைகள் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. இந்​நிலை​யில், அப்​படி 2 கட்டமாகத் தேர்​தல் நடத்​து​வதன் மூலம், யாருக்கு பலன். எந்த கட்சிக்கு இழப்பு என்ற கேள்வி​கள் எழுந்​துள்​ளன.

வழக்​க​மானக் கருத்​துக்​களின்​படி, ஆட்​சி​யில் இருப்​பவர்​களுக்​குத் தங்​கள் விருப்பப்​படி செயல்​படு​வதற்​கான அனுகூலம் எப்​போதும் உண்​டு. ஆனால், 2 கட்ட தேர்தலால் ஆளும் கட்சி தொண்டர்கள் அனைத்து தொகுதியிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

முக்​கிய எதிர்க்​கட்​சி​யாகி​யான பாஜக தனது முழு பலத்​தை​யும் பிரயோகித்து வரு​கிறது. அதேவேளை​யில், மம்தா சற்​றும் பின்​வாங்​கத் தயா​ராக இல்​லை. எனவே, மேற்கு வங்​கத்​தில் நடைபெறும் இந்​தத் தேர்​தல் அனை​வரின் கவனத்​துக்​கும் வந்துள்ளது.

<div class="paragraphs"><p>மம்தா பானர்ஜி | கோப்புப்படம்</p></div>
தவெகவில் ‘உள்ளடி’ அரசியல் தீவிரம்: வேட்பாளர்களை கண்டறிய விஜய் திணறல்?!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in