பஞ்​சாபில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 - 4 ஆண்டுக்குப் பிறகு வாக்குறுதி நிறைவேற்றம்

ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உதவித் தொகை
பஞ்​சாப் நிதி​யமைச்​சர் ஹர்​பால் சிங் சீமா

பஞ்​சாப் நிதி​யமைச்​சர் ஹர்​பால் சிங் சீமா

Updated on
1 min read

சண்டிகர்: பஞ்​சாபில் உள்ள அனைத்​துப் பெண்​களுக்​கும் மாதம் ரூ.1,000 மற்​றும் பட்​டியலின சமூகத்​தைச் சேர்ந்த பெண்​களுக்கு மாதம் ரூ.1,500 வழங்​கும் புதிய திட்​டத்தை ஆம் ஆத்மி அரசு நேற்று அறி​வித்​தது.

கடந்த 2022-ல் நடை​பெற்ற பஞ்​சாப் தேர்​தலின் போது, தங்​கள் கட்சி ஆட்​சிக்கு வந்​தால் அனைத்து பெண்​களுக்​கும் மாதம் ரூ.1,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்​குறுதி அளித்​தது. தேர்​தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி சார்​பில் பகவந்த் மான் முதல்​வ​ரா​னார். 4 ஆண்​டு​களாகி​யும் இந்த வாக்​குறுதி நிறைவேற்​றப்​ப​டவில்லை.

இந்​நிலை​யில், மகளிர் தின​மான நேற்று பஞ்​சாப் சட்டப்பேரவையில் நிதி​யமைச்​சர் ஹர்​பால் சிங் சீமா 2026- 27 நிதியாண்​டுக்​கான பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார். அப்​போது 'முதலமைச்​சர் மாவன் தியான் சத்​கார் யோஜ​னா' என்ற திட்டத்தை அறி​வித்​தார்.

இத்​திட்​டத்​தின் கீழ் அனைத்து பெண்களுக்​கும் மாதம் ரூ.1,000, பட்​டியலின பெண்​களுக்கு மாதம் ரூ.1,500 வழங்​கப்​படும் என அவர் அறி​வித்​தார். இந்​தப் பணம் பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் நேரடி​யாக வரவு வைக்கப்படும் என்​றும் தெரி​வித்​தார்.

அமைச்​சர் சீமா கூறும்​போது, ”18 வயதுக்கு மேற்​பட்ட அனைத்​துப் பெண்​களும் இத்​திட்​டத்​தில் பயன் பெறலாம். தற்​போதுள்ள அல்லது முன்​னாள் நிரந்தர அரசு ஊழியர்​கள், எம்​.பி./ எம்எல்ஏ.க்கள் மற்​றும் வரு​மான வரி செலுத்​துபவர்​கள் ஆகிய ஒரு சிலரைத் தவிர மற்ற அனை​வரும் இதில் பயன்​பெறலாம்.

மேலும், முதி​யோர் ஓய்​வூ​தி​யம், கணவனை இழந்​தவர்​கள், ஆதர​வற்​றோர் ஓய்​வூ​தி​யம் அல்​லது மாற்​றுத் ​திற​னாளி​கள் ஓய்​வூ​தி​யம் போன்ற ஏற்​கெனவே உள்ள சமூக பாது​காப்​புத் திட்​டங்​களின் கீழ் பயனடைந்து வரும் பெண்​களும் இத்​திட்​டத்​துக்​குத் தகுதியுடையவர்​கள்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>பஞ்​சாப் நிதி​யமைச்​சர் ஹர்​பால் சிங் சீமா</p></div>
ஆந்திராவில் மார்ச் 24 முதல் 28 வரை பெருமாளை சூரியன் வழிபடும் விழா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in