ஆந்திராவில் மார்ச் 24 முதல் 28 வரை பெருமாளை சூரியன் வழிபடும் விழா!

ஆந்திராவில் மார்ச் 24 முதல் 28 வரை பெருமாளை சூரியன் வழிபடும் விழா!
Updated on
1 min read

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான பராமரிப்​பில் திருப்பதி - சென்னை வழிதடத்​தில் நாராயணவனம் எனும் ஊரில் வேதவல்லி தாயார் சமேத வேத​ நா​ராயணர் கோயில் உள்​ளது.

கிருத யுகத்​தில் மகா​ விஷ்ணு, முதல் அவதா​ர​மான மச்ச அவதாரம் எடுத்​து, சோமுகன் எனும் ராட்​சதனுடன் போராடி வேதங்கள், சப்த ரிஷிகளை​யும் காத்​தார் என்​பது புராண வரலாறு. அதன்​படி இந்த தலத்​தில் அவர் மச்ச அவதா​ரம் எடுத்து தண்​ணீருக்​குளேயே போர் புரிந்​த​தால், ஈரமாக இருந்த மகா ​விஷ்ணு​வின் உடல் மீது சூரிய கதிர்​கள் மூலம் சூரிய பகவான் வழிபட்​டார் என்​பது தல வரலாறு.

ஆதலால் ஆண்​டுதோறும் மார்ச் மாதம் இக்​கோயி​லில் சூரிய விழா நடை​பெறும். இதன்​படி வரும் 24 முதல் 28ம் தேதி வரை சூரிய பூஜை​ நடை​பெற உள்​ளது. முதல் 3 நாட்​கள் மாலை​யில் சூரிய பூஜை 5.30 - 6.30 மணி வரை நடை​பெறும்.

முதல் நாள் இக்கோயி​லின் முகப்பு கோபுரம் அமைந்​துள்ள கோபுர அடுக்குகள் வழி​யாக சூரிய கதிர்​கள் உள்ளே சென்று 630 அடி தூரத்​தில் உள்ள கோயில் கர்ப்ப கிரகத்​தில் சுவாமி​யின் பாதத்​தில் விழும்.

இதையடுத்து 2ம் நாள் சுவாமி​யின் நாபி​யின் மீதும் 3-ம் நாள் சிரசு மீதும் சூரிய கதிர்​கள் படும். 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை தெப்போற்சவமும் நடை​பெறும். இதற்​கான ஏற்​பாடு​களை திருமலை திருப்​ப​தி தேவஸ்​தானம்​ செய்​து வரு​கிறது.

ஆந்திராவில் மார்ச் 24 முதல் 28 வரை பெருமாளை சூரியன் வழிபடும் விழா!
திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in