

சண்டிகர்: பஞ்சாபில் ஆயுதங்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை மாநில போலீஸார் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கவுரவ் டோரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கைதான இருவரிடம் இருந்து 5 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளோம்.
அவர்களில் ஒருவர் 18 வயதுடையவர். இவர்களுக்கு பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆயுத கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. இவர்கள் அண்மையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.87,000-க்கு கைத் துப்பாக்கியை விற்பனை செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.