

கடப்பா: ஆந்திராவின், கடப்பாவை சேர்ந்த யூ டியூபர் முபாரக். இவர் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த சூழலில் கடப்பா விமான நிலைய சாலையில் முபாரக்கும் அவரது நண்பர் சையத்தும் இணைந்து அண்மையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அதிக வேகத்தால் பைக் நிலை தடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கை ஓட்டிய சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முபாரக் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.