2 குழந்​தைகள் மரணம் தொடர்​பாக மீண்டும் வன்முறை: மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

2 குழந்​தைகள் மரணம் தொடர்​பாக மீண்டும் வன்முறை: மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

இம்பால்: மணிப்​பூரில் 2 குழந்​தைகள் மரணம் தொடர்​பாக நேற்று மீண்​டும் வன்​முறை வெடித்​தது. வன்​முறையை கட்டுப்படுத்த சிஆர்​பிஎப் நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டில் இரு​வர் உயி​ரிழந்​தனர்.

மணிப்​பூரின் விஷ்ணுபூர் மாவட்​டத்​தில் நேற்று அதி​காலை​யில் ஒரு வீட்​டின் மீது ஏவு​கணை விழுந்து வெடித்​த​தில், வீட்​டில் உறங்கிக்​கொண்​டிருந்த 4 வயது சிறு​வனும் அவனது 6 மாத தங்கை​யும் உயி​ரிழந்​தனர். மைதேயி சமூகத்​தினர் அதி​கம் வசிக்கும் பள்​ளத்​தாக்கு மற்​றும் குகி-ஸோமி சமூகத்​தினர் அதி​கம் வசிக்​கும் மலைப்​ பகு​தி​களுக்கு இடை​யில் அமைந்​துள்ள துரோங்லோபி அவாங் லெய்​காய் என்ற கிராமத்​தில் இந்த தாக்குதல் நடந்​துள்​ளது.

தாக்​குதலில் குழந்​தைகளின் தாய் ஓயினம் பினிதா பலத்த காயமடைந்​து, அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இந்த தாக்​குதல் காரண​மாக மணிப்​பூரில் மீண்டும் போராட்​டம் வெடித்​தது. விஷ்ணுபூர் மாவட்​டத்​தில் சிஆர்பிஎப் முகாம் ஒன்றை போராட்​டக்​காரர்கள் முற்றுகையிட்டனர். அவர்​களை விரட்​டியடிக்க சிஆர்​பிஎப் வீரர்கள் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டில் இரு​வர் உயி​ரிழந்​தனர்.

2 எண்​ணெய் டேங்​கர் லாரி​களுக்​கும் போராட்​டக்​கார்​கள் தீவைத்தனர். இந்​நிலை​யில் சட்​டம் மற்​றும் ஒழுங்​கைப் பராமரிக்கும் நோக்​கில், இம்​பால் கிழக்​கு, இம்​பால் மேற்​கு, தவு பால், கக்​சிங், விஷ்ணுபூர் ஆகிய 5 பள்​ளத்​தாக்கு மாவட்​டங்​களில் இணைய சேவையை 3 நாட்​களுக்கு மாநில அரசு முடக்கி வைத்துள்​ளது.

இதற்​கிடை​யில் 2 குழந்​தைகள் உயி​ரிழப்​புக்கு காரண​மான தாக்குதலுக்கு மணிப்​பூர் உள்​துறை அமைச்​சர் கே.கோ​விந்​தாஸ் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இறந்​தவர்​களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்ள அவர், குற்றவாளி​களை சட்​டத்​தின் முன் நிறுத்த தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டு வரு​வ​தாக கூறி​யுள்​ளார்​.

2 குழந்​தைகள் மரணம் தொடர்​பாக மீண்டும் வன்முறை: மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு
ஆயிரம் விளக்கு தொகுதியில் அசத்தப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in