கேதார்நாத், பத்ரிநாத் இடையே ரயில் பாதை அமைக்க 6.59 கி.மீ. நீளம் மலையை குடைந்து சுரங்கப்பாதை

கேதார்நாத், பத்ரிநாத் இடையே ரயில் பாதை அமைக்க 6.59 கி.மீ. நீளம் மலையை குடைந்து சுரங்கப்பாதை
Updated on: 
1 min read

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள கேதார்​நாத், பத்​ரிநாத், யமுனோத்ரி, கங்​கோத்ரி ஆகிய 4 புனிதத் தலங்​கள் ‘சார்தாம்’ என்று அழைக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் கேதார்​நாத், பத்​ரிநாத் ஆகிய தலங்​களுக்கு விரைவாக சென்று வரு​வதற்கு வசதி​யாக 125 கிலோமீட்​டர் நீளத்​துக்கு ரிஷிகேஷ்-கர்​ணபிரயாக் இடையே ரயில் பாதை அமைக்​கும் திட்​டத்தை மத்​திய ரயில்வே அமைச்​சகம் தொடங்​கி​யுள்​ளது.

இதன் ஒரு பகுதியாக ருத்​ரபிரயாக் மாவட்​டத்​தில் அமைந்​துள்ள மலை​யைக் குடைந்து சுரங்​கப் பாதை அமைக்​கும் பணி நடைபெற்று வரு​கிறது. இதன்​படி, சுமேர்​பூர் பகுதி​யில் 4.7 கி.மீ. தூர​மும், மரோரா பகுதி​யில் 1.79 கிலோ மீட்​டர் தூர​மும் ஆக மொத்​தம் 6.59 கிலோமீட்​டர் தூரத்​துக்கு மலை​யைக் குடைந்து சுரங்​கப்​பாதை வெற்​றிகர​மாக அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அமைச்​சகம் தெரி​வித்துள்​ளது.

இதனிடையே சுரங்​கம்-1-ல் 110 மீட்​டர் தூரத்​துக்கு மலை​யைக் குடைய வேண்​டிய பணி இன்​னும் நடை​பெறாமல் உள்​ளது. அங்கு மண், பாறைகள் சரியும் நிலை உள்​ள​தால் அப்​பகுதி​யில் பணி நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதையடுத்து அங்கு மண் சரியாத​படி சுரங்​கத்​தைக் குடைவதற்​குத் தேவை​யான சிறப்பு தொழில்​நுட்​பம் போன்​றவற்றை அமல்​படுத்த ரயில்வே அமைச்​சகம் பரிந்​துரை செய்​துள்​ளது.

இந்த ரயில்வே திட்​டம் தொடங்​கும்​போது கேதார்​நாத், பத்​ரிநாத் செல்​லும் பக்​தர்​கள் விரைவில் புனிதத் தலங்​களை அடைய முடியும் என்​றும் விரைவில் தரிசனத்தை முடித்து விட்டு திரும்ப முடியும் என்​றும் ரயில்வே அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

கேதார்நாத், பத்ரிநாத் இடையே ரயில் பாதை அமைக்க 6.59 கி.மீ. நீளம் மலையை குடைந்து சுரங்கப்பாதை
பாஜக, அகாலி தளம் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

X