

சண்டிகர்: பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து போட்டியிடப் போவதாக பாஜகவும், சிரோமணி அகாலி தளம் கட்சியும் கடந்த வாரம் கூட்டாக அறிவித்தன.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் கேவல் சிங் தில்லன், சுனில் ஜாக்கர் மற்றும் அஷ்வனி சர்மா ஆகியோர், சிரோமனி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் வீட்டுக்கு நேற்று சென்றனர்.
இந்த சந்திப்பின்போது, பஞ்சாபில் உருவாகி வரும் அரசியல் சூழல் மற்றும் தேர்தல் வியூகங்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.