திரிணமூல் எம்.பி.மஹுவா மொய்த்​ரா

திரிணமூல் எம்.பி.மஹுவா மொய்த்​ரா

மேற்கு வங்க தேர்தல் பார்வையாளருடன் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்​ரா மோதல்

Published on

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப் பேர​வைக்கு தேர்​தல் நடைபெறவுள்​ளதையொட்டி சிறப்பு வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்தப் பணி​கள் ​(எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கின்​றன. இதற்காக தேர்​தல் நுண் பார்​வை​யாளர்​களை உச்ச நீதி​மன்​றம் நியமித்துள்ளது.

இந்​நிலை​யில் கடந்த 18-ம் தேதி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.மஹுவா மொய்த்ரா வெளியிட்ட பதிவில், “உங்​கள் ​(தேர்​தல் ஆணை​யம்) தேர்​தல் பார்வை​யாளர் சி.எஸ்​.​முரு​கன் ஐஏஎஸ் அதி​காரியை சிறிது கட்டுப்​படுத்தி வைத்​துக் கொள்​ளுங்​கள். தேர்​தல் நுண் பார்வையாளர்​களுக்கு அவர் பல்​வேறு ரகசிய வாட்​ஸ்​-அப் குரூப்கள் மூலம் தவறான உத்​தர​வு​களை பிறப்​பித்து வரு​கிறார். இது உச்சநீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ரானது” என்று கூறி​யிருந்​தார்.

மேலும், அந்த பதி​வில் `கு​யிக்கன் முரு​கன்' தெலுங்கு திரைப் படத்தில் வரும் கேரக்​டர் புகைப்​படத்​தை​யும் அதில் இணைத்திருந்​தார். இதற்கு பதிலடி தரும் வித​மாக நேற்று தனது எக்ஸ் பக்​கத்​தில் சி.எஸ்.முரு​கன் கூறும்​போது, “அந்​தப் படத்​தில் வெளி​யிட்​டுள்​ளது போல என்​னிடம் அதிக அளவு துப்​பாக்​கி​கள் இல்​லை.

இருப்​பினும், தமிழ்​நாடு காவல் துறை​யில் நான்​கரை ஆண்​டு​கள் பயிற்சி பெற்​ற​போது, பல்​வேறு வகை​யான துப்​பாக்​கி​களைக் கையாள​வும், சட்​டப்​பூர்​வ​மாக​வும் திறம்​பட​வும் அவற்​றைப் பயன்படுத்த எனக்​குப் பயிற்சி அளிக்​கப்​பட்​டது” என்று கூறியருந்தார்.

இந்​நிலை​யில் ரகசிய வாட்​ஸ்​-அப் குரூப்​கள் மூலம் வாக்காளர்களின் பெயர்​களை நீக்க முரு​கன் உத்​தர​விட்டு வருகிறார் என்று திரிண​மூல் பொதுச் செயல​ரான அபிஷேக் பானர்​ஜி​யும் நேற்று குற்​றச்​சாட்டை முன் ​வைத்​துள்​ளார். வாக்காளர்​களின் பெயர்​களை நீக்​கு​வதற்​காகவே நுண் பார்வையாளர்​களை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் பயன்படுத்துகின்​றனர்​ என்​றும்​ அவர்​ புகார்​ தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>திரிணமூல் எம்.பி.மஹுவா மொய்த்​ரா</p></div>
விஜய் வருகையும், பள்ளி மாணவர்களின் ‘திடீர்’ அரசியல் ஆர்வமும் - ஆரோக்கியமா, ஆபத்தா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in