

கொல்கத்தா: அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை போன்று மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் மசூதி கட்டப்போவதாகவும் இதற்கு டிசம்பர் 6-ல் அடிக்கல் நாட்டப்போவதாகவும் அத்தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயுன் கபீர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், “மதவாத அரசியலில் திரிணமூல் காங்கிரஸ் ஈடுபடாது. அதை உறுதியுடன் எதிர்க்கும். முர்ஷிதாபாத் வரலாற்றை நாம் மறக்க முடியாது. இங்கு ஒவ்வொரு வீட்டிலும் சிராஜ்-உத்-தவுலா போற்றப்படுகிறார்.
இந்த மாவட்டம் நவாப்களின் பூமி. இங்கு அனைத்து மதங்களின் புனிதத் தலங்களும் உள்ளன. கலவர அரசியலை முர்ஷிதாபாத் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். முர்ஷிதாபாத் எப்போதும் ஒற்றுமையை நிலைநிறுத்தி வருகிறது” என்றார்.