

கோப்புப்படம்
ராஞ்சி: ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டம் கெந்துவாதி பஸ்தியில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் கார்பன் மோனாக்சைடு விஷவாயுக் கசிவே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கெந்துவாதி பஸ்தி பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ‘பாரத் கோக்கிங் கோல்’ நிறுவனம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருவதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.