மணிப்பூரில் முடக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க பழங்குடி சமூகத்தினர் அனுமதிக்க வேண்டும்

உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
மணிப்பூரில் முடக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க பழங்குடி சமூகத்தினர் அனுமதிக்க வேண்டும்
Updated on
1 min read

புதுடெல்லி: மணிப்​பூரில் குகி - நாகா சமூகத்​தினர் மோதலால் முடக்​கப்​பட்​டுள்ள தேசிய நெடுஞ்​சாலைகளைத் திறக்க இரு தரப்​பினரும் இணைந்து செயல்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

மணிப்​பூர் மாநிலத்​தில் குகி - நாகா ஆகிய பழங்குடியின சமூகத்​தினர் இடையி​லான மோதல் காரண​மாக, காங்​போக்பி மாவட்​டம் வழி​யாகச் செல்​லும் தேசிய நெடுஞ்​சாலை மூடப்​பட்​டுள்​ளது. இதனால் உணவு, மருந்​து, எரிபொருள் உள்​ளிட்ட அத்​தி​யா​வசி​யப் பொருட்​களின் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், சாலைகளைத் திறக்க உத்​தர​விடக் கோரி ‘குகி பெண்​கள் மனித உரிமை​கள் அமைப்​பு’ தாக்​கல் செய்த மனு, உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி மற்​றும் வி. மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள் கூறும்​போது, “நெடுஞ்​சாலைகள் முடங்கியுள்​ள​தால் பொது​மக்​கள் கடுமை​யாக அவதிப்படுகின்றனர். சாலைகளை முடக்​கு​வது யாருக்​கும் பயனளிக்​காது. இரு தரப்​பினரும் பரஸ்​பரம் குற்​றம்​சாட்​டு​வதை விடுத்​து, நெடுஞ்​சாலைகளைத் திறப்​ப​தற்​கான நடை​முறைத் தீர்வை முன்​வைக்க வேண்​டும்.

வலுக்​கட்​டாய​மாக சாலைத் தடுப்​பு​களை அகற்ற முயன்​றால் அது மீண்​டும் வன்​முறைக்கு வழி​வகுக்​கக்​கூடும். தற்​போது முடக்​கப்​பட்​டுள்ள சாலைகளின் விவரங்​களை​யும், அவற்றை மீண்​டும் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டு​வரு​வதற்​கான திட்​டத்​தை​யும் சம்​பந்​தப்​பட்ட தரப்​பினர் தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​” என்​றனர்​.

மணிப்பூரில் முடக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க பழங்குடி சமூகத்தினர் அனுமதிக்க வேண்டும்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in