போக்குவரத்து விதிமீறல் சலான் 2 மடங்கு உயர்வு: 4 ஆண்டுகளில் நிலுவைத் தொகையும் அதிகரிப்பு

போக்குவரத்து விதிமீறல் சலான் 2 மடங்கு உயர்வு: 4 ஆண்டுகளில் நிலுவைத் தொகையும் அதிகரிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: போக்​கு​வரத்​து வி​தி​மீறல்​களுக்​காக வழங்​கப்​பட்​ட சலான்​களின்​ எண்​ணிக்​கை 4 ஆண்​டு​களில்​ இரு​மடங்​கு உயர்ந்​துள்​ள அதே வேளை​யில்​, செலுத்​தப்​ப​டாத நிலு​வைத்​ தொகைகளும்​ கணிச​மாக அதி​கரித்​துள்​ளது.

போக்​கு​வரத்​து வி​தி​மீறல்​களை மின்​னணு முறை​யில்​ அமல்​படுத்​து​வது மற்​றும்​ செலுத்​தப்​ப​டாத போக்​கு​வரத்​து ‘இ-சலான்​’ அபராதங்​களை வசூலிப்​பது தொடர்​பான மனுவை உச்​ச நீதி​மன்​றம்​ சமீபத்​தில்​ வி​சா​ரித்​தது.

அப்​போது, ‘இ-சலான்’களை வழங்​கு​வதை விட அவற்​றின்​ மூலம்​ வி​திக்​கப்​பட்​ட அபராதத்​ தொகை​யை வசூலிப்​ப​தே உண்​மை​யான சவால்​ என்​று குறிப்​பிட்​ட நீதி​மன்​றம்​, போக்​கு​வரத்து வி​தி​களை மீறு​பர்​களுக்கு ‘இ-சலான்​’ மூலம்​ வி​திக்​கப்​படும்​ அபராதங்​களை மின்​ கட்​ட​ணத்​துடன்​ இணைத்​து வசூலிக்​கலாம்​ என பரிந்​துரை செய்​தது.

இந்​தப்​ பரிந்​துரை ஒரு விவாதத்​தைத்​ தூண்​டி​யுள்​ளதுடன், நாடு முழு​வதும்​ அதி​கரித்​து வரும்​ தீர்க்​கப்​ப​டாத போக்​கு​வரத்​து வி​தி​மீறல்​களின்​ எண்​ணிக்​கை மீது புதி​ய கவனத்​தை​யும்​ ஈர்த்​துள்​ளது. அந்​த வகை​யில்​, சாலைப்​ போக்​கு​வரத்​து மற்​றும்​ நெடுஞ்​சாலைகள்​ அமைச்​சகத்​தின்​படி, போக்​கு​வரத்​து வி​தி​மீறல்​களுக்​காக வழங்​கப்​பட்​ட சலான்​களின்​ எண்​ணிக்​கை கடந்​த 4 ஆண்​டு​களில்​ இரட்​டிப்​பாகி உள்​ளது.

அதன்​படி, போக்​கு​வரத்​து சலான்​களின்​ எண்​ணிக்​கை 2021-ல்​ 4.2 கோடியி​லிருந்​து 2025-ல்​ 9.6 கோடி​யாக அதி​கரித்​தது. 2026-ம்​ ஆண்​டின்​ முதல்​ 9 மாதங்​களில்​ இந்​த எண்​ணிக்​கை 7.8 கோடியை எட்​டியது. அபராதங்​களின்​ எண்​ணிக்​கை அதி​கரிக்​கும்​போது, செலுத்​தப்​ப​டாத நிலு​வைத்​ தொகைகளும்​ அதி​கரிக்​கின்​றன.

செலுத்​தப்​ப​டாத சலான்​களின்​ பங்​கு, கடந்​த பல ஆண்​டு​களாக சீராக​வும்​ கடுமை​யாக​வும்​ அதி​கரித்​து வந்​துள்​ளது. 2022-ம்​ ஆண்​டில்​ வழங்​கப்​பட்​ட மொத்​த சலான்​களில்​ கிட்​டத்​தட்​ட 48% நிலு​வை​யில்​ இருந்தன. இந்​த விகிதம்​ 2023-ல்​ 55%, 2024-ல்​ 63%, 2025-ல்​ 70%, 2026-ல்​ 82 சதவீத​மாக​வும்​ உயர்ந்​தது.

உத்தர பிரதேசம் முதலிடம்: அதி​கபட்​ச​மாக உத்​தர பிரதேசத்​தில்​ சுமார்​ 9 கோடி போக்​கு​வரத்​து சலான்​கள்​ வழங்​கப்​பட்​டுள்​ளன. அதனைத்​ தொடர்ந்​து தெலங்​கா​னா​வில்​ 8.2 கோடி​யும்​, கேரளா​வில்​ 4.7 கோடி​யும்​, ஹரி​யா​னா​வில்​ 2.4 கோடி​யும்​ வழங்​கப்​பட்​டுள்​ளன.

போக்குவரத்து விதிமீறல் சலான் 2 மடங்கு உயர்வு: 4 ஆண்டுகளில் நிலுவைத் தொகையும் அதிகரிப்பு
அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பேட்டரி சேமிப்புத் திறன் 6.63 ஜிகாவாட்டாக உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in