அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பேட்டரி சேமிப்புத் திறன் 6.63 ஜிகாவாட்டாக உயர்வு

அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பேட்டரி சேமிப்புத் திறன் 6.63 ஜிகாவாட்டாக உயர்வு
Updated on: 
1 min read

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் காவ்​டா​வில் செயல்​பட்டு வரும் தனது பேட்​டரி ஆற்​றல் சேமிப்பு அமைப்​பின் (பிஇஎஸ்​எஸ்) திறனை, 6.63 ஜிகா​வாட்​-ஆக உயர்த்​தி​யுள்​ள​தாக அதானி கிரீன் எனர்ஜி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறு​வனத்​தின் செயல் இயக்​குநர் சாகர் அதானி கூறிய​தாவது: குஜ​ராத் மாநிலம் காவ்​டா​வில் செயல்​பட்டு வரும் எங்​களு​டைய பிஇஎஸ்​எஸ் அமைப்​பின் சேமிப்​புத் திறன் கடந்த 2026 ஜூன் மாதத்​தில் 3.55 ஜிகா​வாட்​டாக இருந்​தது. இது கணிச​மாக அதி​கரிக்​கப்​பட்டு 6.63 ஜிகா​வாட்டை எட்​டி​யுள்​ளது. குறிப்​பாக, வெறும் 14 மாதங்​களில் எட்​டப்​பட்​டுள்ள இந்த சாதனை, எங்​கள் நிறு​வனத்​துக்​கும் இந்​தி​யா​வின் பசுமை ஆற்​றல் மாற்​றத்​துக்​கும் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக அமை​யும். நாட்​டின் மின் தேவை அதி​கரித்து வரும் சூழலில், மின்​கட்​டமைப்​புக்​குத் தேவைப்​படும் நேரங்​களில் சீரான மற்​றும் நம்​பக​மான மின்​சா​ரத்தை வழங்க இந்த அமைப்பு உதவும்.

இந்த சாதனை​யின் மூலம் இந்​தி​யா​வின் மொத்த பேட்​டரி சேமிப்​புத் திற​னான 12.6 ஜிகா​வாட்​டில், 50 சதவீதத்​துக்​கும் அதி​க​மான பங்​களிப்பை எங்​கள் அதானி கிரீன் எனர்ஜி வழங்​கு​கிறது. இந்த 6.63 ஜிகா​வாட் சேமிப்பு அமைப்​பைக் கொண்​டு, ஒரு நாளைக்​குச் சுமார் 20 லட்​சம் வீடு​களுக்​குத் தேவை​யான தூய்​மை​யான மின்​சா​ரத்தை வழங்க முடி​யும். நாக்​பூர், பாட்னா அல்​லது விசாகப்​பட்​டினம் போன்ற பெரிய நகரங்​களின் உச்​சகட்ட மின் தேவையை பல மணி நேரத்​துக்கு இதன் மூலம் பூர்த்தி செய்ய இயலும்.

இந்​தச் சேமிப்​புத் திற​னானது, 1,50,000-க்​கும் மேற்​பட்ட நடுத்தர அளவு மின்​சார வாக​னங்​களின் பேட்​டரி திறனுக்கு சமமானது. மேலும், டெல்லி மெட்ரோ ரயி​லின் ஒரு நாள் மின் தேவையைப் போல இரு மடங்கு ஆற்​றலை இதில் சேமிக்க முடி​யும்.

2026-27 நிதி​யாண்​டில் கூடு​தலாக 10 ஜிகா​வாட் பேட்​டரி சேமிப்​புத் திறனை இணைக்​க​வும் அடுத்த 5 ஆண்​டு​களில் ஒட்​டுமொத்த சேமிப்​புத் திறனை 50 ஜிகா​வாட்​டாக உயர்த்​த​வும் இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறினார்.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பேட்டரி சேமிப்புத் திறன் 6.63 ஜிகாவாட்டாக உயர்வு
இந்திய பங்குச் சந்தைகள் 8-வது வாரமாக சரிவு: சென்செக்ஸ் 571 புள்ளிகள் வீழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in