

புதுடெல்லி: பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.
இதன் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பேசுகையில், ‘‘பாரம்பரிய மருத்துவத்திற்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. அதன் பயன்பாட்டை விரிவுபடுத்த அறிவியலின் மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும்’’ என்றார்.
பிரதமர் மோடி, ‘ஆயுஷ் ஒருங்கிணைந்த சேவை போர்டல்' உட்பட பல முக்கிய ஆயுஷ் திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆயுஷ் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்துக்கான ஆயுஷ் முத்திரையை வெளியிட்டார்.
யோகா பயிற்சியில் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அறிக்கை மற்றும் ஆயுஷ் மருத்துவத்தில் 11 ஆண்டுகால மாற்றம் என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அஸ்வகந்தா குறித்த நினைவு அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டார்.