மதம் மாறிய இஸ்லாமியருக்கு பி.சி சான்றிதழ் வழங்க தடை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மனு

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: மதம் மாறி இஸ்​லாத்தை தழு​விய​வர்​களுக்கு, ‘பிற்​படுத்​தப்​பட்ட முஸ்​லிம்’ என்று சாதி சான்​றிதழ் வழங்​கக் கூடாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்​யக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்​கல் செய்​துள்​ளது.

தூத்​துக்​குடி மாவட்​டம் தெற்கு இலந்​தைகுளத்​தைச் சேர்ந்த பரமசிவம் என்​பவர், கடந்த 2015-ம் ஆண்டு இந்து மதத்​தில் இருந்து இஸ்​லாம் மதத்​துக்கு மாறினார். தனது பெயரை சமீர் அகமது என மாற்​றிக் கொண்​டார். பின்​னர், தனக்கு முஸ்​லிம் லெப்பை என்ற சமூகப் பிரி​வின் கீழ் சான்​றிதழ் வழங்​கக் கோரி விண்​ணப்​பித்​தார். அவரது விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து, உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை​யில் வழக்​குத் தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை, இந்து மதத்​தில் இருந்து இஸ்​லாத்​துக்கு மாறிய ஒரு​வர், தனது முந்​தைய சமூக அடை​யாளத்​தின் அடிப்​படை​யில் பிற்​படுத்​தப்​பட்ட முஸ்​லிம் சான்​றிதழ் கோர முடி​யாது என்று தீர்ப்​பளித்​தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மேல்​முறையீடு செய்​தது. வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்​றும்  சந்​திரசேகர் ஆகியோர் அடங்​கிய அமர்வு, “இந்து மதத்​தில் இருந்து இஸ்​லாம் உள்​ளிட்ட இந்து அல்​லாத மதங்​களுக்கு மாறிய​வர்​கள், தங்​களது முந்​தைய சமூக அடை​யாளத்​தின் அடிப்​படை​யில் அரசி​யலமைப்பு பிரிவு 16(4)ன் கீழ் பிற்​படுத்​தப்​பட்ட சமூக நிலைக்​கான இடஒதுக்​கீட்டை கோர முடி​யாது” என்று தீர்ப்​பளித்​தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்​யக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்​கல் செய்​துள்​ளது. அதில், “நாடு முழு​வதும் இது போன்ற விவகாரங்​கள் தொடர்​பான வழக்கை உச்ச நீதி​மன்​றத்​தின் அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரும் நிலை​யில் அதில் முடிவு காண்​ப​தற்கு முன்​பாகவே தமிழ்​நாடு விவகாரத்​தில் நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கியது தவறு” என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு விரைவில் விசா​ரணைக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
கஞ்சா கடத்திய வழக்கில் தண்டனை அறிவித்ததும் தப்பிய கைதி

X