சட்டப்பேரவைத் தேர்தலில் 4023 வேட்பாளர்களில் 3352 பேர் டெபாசிட் இழப்பு

புள்ளிவிவரங்களை 72 மணி நேரத்தில் வெளியிட்டு தேர்தல் ஆணையம் சாதனை
சட்டப்பேரவைத் தேர்தலில் 4023 வேட்பாளர்களில் 3352 பேர் டெபாசிட் இழப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட 72 மணி நேரத்​தில் தேர்​தல் தொடர்​பான புள்​ளி​விவரங்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அதன்​படி, தமிழகத்​தில் 86 சதவீத வாக்​கு​கள் பதி​வாகி​யிருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதுதொடர்​பாக இந்​திய தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் உள்​ளிட்ட 5 மாநிலத் தேர்​தல் தொடர்​பான புள்​ளி​விவரங்​கள், தேர்​தல் முடிவு அறிவிக்​கப்​பட்ட 72 மணி நேரத்​துக்​குள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இந்த புள்​ளி​விவர அறிக்​கைகளை டிஜிட்​டல் முறை​யில் விரை​வாகப் புதுப்​பித்து வெளி​யிடு​வது என்​பது, கடந்த ஓராண்​டில் ஆணை​யம் மேற்​கொண்ட 30-க்​கும் மேற்​பட்ட முயற்​சிகளில் ஒன்​றாகும். இசிஐநெட் (ECINET) செயலி அறி​முகம் செய்​யப்​படு​வதற்கு முன்​பு, இந்த தரவு​களை கள அலு​வலர்​கள் கையால் பூர்த்தி செய்து வந்​த​தால், இந்த செயல்​முறைக்கு பல வாரங்​கள் முதல் மாதங்​கள் வரை ஆனது.

தற்​போது வெளி​யிடப்​பட்ட புள்​ளி​விவரத்​தில் வேட்​பாளர்​கள், வாக்​காளர்​கள், பதி​வான வாக்​கு​கள், எண்​ணப்​பட்ட வாக்​கு​கள், கட்சி வாரி​யாக மற்​றும் வேட்​பாளர் வாரி​யாக பதி​வான வாக்​கு​கள் என 14 வகை​யான தரவு​கள் உள்​ளன. இதை இசிஐநெட் செயலி மற்​றும் இணை​யதளம் (https://www.eci.gov.in/statistical-reports) மூலம் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட 72 மணி நேரத்​துக்​குள் புள்​ளி​விவர அறிக்​கைகள் வெளி​யிடப்​படு​வது இதுவே முதல்​முறை. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட புள்​ளி​விவரங்​களின்​படி, தமிழகத்​தில் 5,74,11,793 வாக்​காளர்​கள் உள்​ளனர். இதில் 4,93,89,958 பேர் வாக்​களித்​துள்​ளனர். இதில், தபால் மூலம் மட்​டும் 5,86,954 பேர் வாக்​களித்த நிலை​யில், அவற்​றில் 65,047 பேரின் தபால் வாக்​கு​கள் நிராகரிக்​கப்​பட்​டுள்​ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் 4023 வேட்பாளர்களில் 3352 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். நோட்​டாவுக்கு 1,99,805 பேர் வாக்​களித்​துள்​ளனர். செல்​லத்​தக்​க​தாக 4.91 கோடி வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. வெளி​நாடு​களில் 2,730 வாக்​காளர்​கள் உள்ள நிலை​யில், 16 பேர் மட்​டுமே வாக்​களித்​துள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் பதி​வான வாக்​கு​கள்​ 86.03 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் 4023 வேட்பாளர்களில் 3352 பேர் டெபாசிட் இழப்பு
பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in