பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு

பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக காவல் துறை​யில் பணி​யாற்​றும் பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யின போலீ​ஸாருக்​கும் வீடு வாடகைக்கு தர மறுக்​கப்​படு​வ​தாக சம்​பந்​தப்​பட்ட வகுப்பை சேர்ந்த போலீ​ஸார், கர்​நாடக போலீஸ் டிஜிபி, பெங்​களூரு மாநகர ஆணை​யருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர்.

இதுகுறித்து கர்​நாடக உள்​துறை அமைச்​சர் பரமேஷ்வர் கூறுகை​யில், ''பெங்​களூரு மாநகரில் பணி​யாற்​றும் காவலர்​களில் 40 சதவீத​மானவர்​கள் தங்​கும் அளவில் அரசின் குடி​யிருப்​பு​கள் இருக்​கின்​றன. இத்​தகைய பிரச்​சினை​களை தீர்க்க அரசு தரப்​பில் குடி​யிருப்​பு​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க வேண்​டி​யுள்​ளது.

அது தொடர்​பாக முதல்​வர் சித்​த​ராமை​யா​வுடன் ஆலோ​சித்து உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். அதேவேளை​யில் சாதி பாகு​பாடு காரண​மாக வீட்டை வாடகைக்கு தர மறுப்​பவர்​கள் மீது சட்ட ரீதி​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்​'' என்​றார்​.

பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு
மேற்கு வங்கத்தில் திரிணமூல் தோல்வி: 15 ஆண்டுக்குப்பின் தலைமுடியை மழித்து சபதத்தை நிறைவேற்றிய பாஜக ஆதரவாளர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in