நாட்டிலேயே முதல் முறையாக தன்பாலின ஈர்ப்பாளர் மேனகா குருசாமி எம்.பி.யாகிறார்

மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது திரிணமூல் காங்கிரஸ்
மேனகா குருசாமி

மேனகா குருசாமி

Updated on
1 min read

புதுடெல்லி: மாநிலங்​களவை​யில் விரை​வில் காலி​யாக உள்ள 37 இடங்​களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. இதன்​படி, மேற்கு வங்​கத்​தில் 5 இடங்​களுக்கு தேர்​தல் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி சார்​பில், உச்ச நீதி​மன்ற மூத்த வழக்​கறிஞரும் தன்​பாலின ஈர்ப்பாள​ரு​மான (எல்​ஜிபிடிக்​யூ) மேனகா குரு​சாமி, சட்​டப்​பேரவை உறுப்​பினர் பாபுல் சுப்​ரியோ, டோலிவுட் நடிகை கோயல் மல்​லிக் மற்​றும் சமீபத்​தில் ஓய்வு பெற்ற மேற்கு வங்க காவல் துறை தலைமை இயக்​குநர் (டிஜிபி) ராஜீவ் குமார் ஆகியோர் வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் மேனகா குரு​சாமி வெற்றி பெற்​றால் நாட்​டின் முதல் எல்​ஜிபிடிக்யூ நாடாளு​மன்ற உறுப்​பினர் என்ற வரலாறு படைப்​பார்.

மேனகா குரு​சாமி ஒரு அரசி​யலமைப்​புச் சட்ட வல்​லுநர் மற்​றும் இந்​திய தேசிய சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் முன்​னாள் மாணவர். அவர் 1997-ம் ஆண்டு முன்​னாள் அட்​டர்னி ஜெனரல் அசோக் தேசா​யின் கீழ் தனது சட்​டப் பணி​யைத் தொடங்​கி​னார். மேனகா தனது ஆரம்​பக் காலங்​களில் வழக்​கு​கள் மற்​றும் அரசி​யலமைப்பு விவ​காரங்​களில் முக்​கிய​மாகப் பணி​யாற்​றி​னார்.

பின்​னர் வெளி​நாடு​களில் உயர்​கல்​வியைத் தொடர்ந்த அவர், ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் பிசிஎல் பட்​ட​மும், ஹார்​வர்டு சட்​டப் பள்​ளி​யில் முதுகலை சட்​டப் பட்​ட​மும் பெற்​றார். நியூ​யார்க்​கில் உள்ள ‘டே​விஸ் போல்க் & வார்​டு​வெல்' நிறு​வனத்​தில் வழக்​கறிஞ​ராகப் பணி​யாற்​றி​னார். 2015-ம் ஆண்டு ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டம் பெற்​றார்.

அமெரிக்​கா​வின் புகழ்​பெற்ற யேல், கொலம்​பியா மற்​றும் நியூ​யார்க் பல்​கலைக்​கழகங்​களில் கவுர​வப் பேராசிரிய​ராக மேனகா பணி​யாற்​றி​யுள்​ளார். மேலும், ஐக்​கிய நாடு​களின் வளர்ச்சி நிதி​யம் மற்​றும் சிறு​வர் நிதி​ய​மான யுனிசெஃப் ஆகிய​வற்​றுக்கு ஆலோ​சக​ராக​வும் செயல்​பட்​டுள்​ளார்.

இந்​தி​யா​வில், பிரிவு 377-ஐ (தன்​பாலின சேர்க்​கையை குற்​ற​மாகக் கருதும் சட்​டம்) எதிர்த்து வாதிட்ட சட்​டக் குழு​வில் மேனகா முக்​கியப் பங்கு வகித்​தார். அதி​காரத்​துவ சீர்​திருத்​தங்​கள், அகஸ்டா வெஸ்ட்​லேண்ட் ஊழல் வழக்​கு, சல்வா ஜூடும் வழக்கு மற்​றும் கல்வி உரிமைச் சட்​டம் தொடர்​பான பல முக்​கிய வழக்​கு​களி​லும் அவர் வா​தாடி உள்​ளார்.

<div class="paragraphs"><p>மேனகா குருசாமி </p></div>
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கன்: பைலட்டை உயிருடன் பிடித்த தலிபான்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in