பவானிப்பூர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைய பாஜகவினரின் கார்களை மட்டும் அனுமதிப்பது ஏன்? - திரிணமூல் காங். புது குற்றச்சாட்டு

பவானிப்பூர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைய பாஜகவினரின் கார்களை மட்டும் அனுமதிப்பது ஏன்? -  திரிணமூல் காங். புது குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்​கு​ வங்​கம் பவானிப்​பூர் வாக்கு எண்​ணும் மையத்​தில் பாஜகவினரின் 2 கார்​கள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யினர் குற்றச்சாட்டை கூறி​யுள்​ளனர்.

ஐந்து மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு​கள் இன்று வெளியாகின்​றன. இதற்​கான ஏற்​பாடு​களில் தேர்​தல் ஆணை​யம் முழு ​வீச்​சில் ஈடு​பட்​டுள்​ளது. மேற்கு வங்​கத்​தில் உள்ள சகாவத் பள்ளி வாக்கு எண்​ணும் மையத்​தில், ஓட்டு இயந்​திரங்​கள் வைக்கப்​பட்​டுள்ள பாது​காப்பு அறை​களில் அங்​கீ​காரம் அற்ற நபர்​கள் நுழைவ​தாக கூறி முதல்​வர் மம்தா பானர்ஜி தனது கட்சியினருடன் வாக்கு எண்​ணும் மையத்​துக்கு வெளியே கடந்த வியாழக்​கிழமை 4 மணி நேரம் தர்ணா நடத்​தி​னார்.

இதே​போல் வடக்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டத்​தில் வாக்கு எண்ணிக்கை நடை​பெறும் அரசு கல்​லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் சில மணிநேரம் சுவிட்ச் ஆப் செய்​யப்​பட்​ட​தாக திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யினர் நேற்று முன்​தினம் போராட்​டம் நடத்​தினர். இது அடிப்​படை ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்டு என பாஜக செய்தி தொடர்​பாளர் சாஜல் கோஷ் தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில் மேற்​கு​வங்​கத்​தில் முதல்​வர் மம்தா போட்​டி​யிடும் பவானிப்​பூரில் உள்ள வாக்​கும் எண்​ணும் மையத்​தில் ஓட்​டுப்பதிவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்ள வளாகத்​தில் பாஜக கொடி பொருத்​தப்​பட்ட 2 கார்​களை மத்​திய ஆயுதப்​படை போலீ​ஸார் அனு​ம​தித்​தனர் என திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​கள் குற்றம்சாட்​டி​யுள்​ளனர்.

இதுகுறித்து அங்​கிருந்து பாது​காப்புப் படை​யினரிடம் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யினர் புகார் கூறிய​போது, அவர்​களை வாக்​கும் எண்​ணும் மையத்தில் இருந்து 100 மீட்​டர் தொலை​வுக்கு பாதுகாப்புப் படை​யினர் விரட்​டிய​தாக​வும் திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த புகார் குறித்து தேர்​தல் ஆணைய அதி​காரி ஒரு​வர் அளித்த விளக்​கத்​தில், ”ப​வானிப்​பூர் வாக்கு மையம் அமைந்​துள்ள ஹரீஸ் முகர்ஜி சாலை வழி​யாக பாஜக கொடி பொருத்​திய வாக​னம் கடந்து சென்​ற​போது அதில் போலீ​ஸார் சோதனை நடத்​தி, அதில் ஒன்​றும் இல்லை என்று தெரிந்த பின்​பே அந்​த வாக​னம்​ சாலையை கடக்​க அனு​ம​தி வழங்​கப்​பட்​டது” என்​றார்​.

பவானிப்பூர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைய பாஜகவினரின் கார்களை மட்டும் அனுமதிப்பது ஏன்? -  திரிணமூல் காங். புது குற்றச்சாட்டு
Lubber Pandhu: யசோதா, துர்கா காட்டும் ‘கெத்து’ம் அன்பும் | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in