மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலர், டிஜிபி மாற்றத்துக்கு திரிணமூல் கடும் கண்டனம்

மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலர், டிஜிபி மாற்றத்துக்கு  திரிணமூல் கடும் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் மேற்கு வங்க தலை​மைச் செய​ல​ர், டிஜிபி உள்​ளிட்ட உயர் அதி​காரி​களை அடுத்​தடுத்து மாற்றி தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகம், மேற்கு வங்​கம் உட்பட 5 மாநில தேர்​தல் அட்​ட​வணையை தேர்​தல் ஆணை​யம் நேற்று முன்​தினம் அறி​வித்​தது. இந்த அறி​விப்பு வெளி​யானவுடன் மேற்கு வங்​கத்​தில் தலை​மைச் செய​ல​ராக இருந்த நந்​தினி சக்​கர​வர்த்தி பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டார். அவருக்கு பதில் துஷ்யந்த் நரி​யாலா அப்​ப​த​வி​யில் நியமிக்​கப்​பட்​டார். இது​போல உள் துறை செய​ல​ராக இருந்த ஜெக​திஷ் பிர​சாத் மீனா​வும் அப்​ப​த​வியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டார்.

மேலும் சங்​கமித்ரா கோஷை உள்துறை முதன்​மைச் செய​ல​ராக நியமிக்​கு​மாறு மாநில அரசுக்கு தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. இதில் செய​லா​ளர் சுஜீத் குமார் மிஸ்ரா கையெழுத்​திட்​டுள்​ளார். இந்​நிலை​யில், மேற்கு வங்க டிஜிபி பீயுஷ் பாண்​டே, கொல்​கத்தா காவல் ஆணை​யர் சுப்​ர​திம் சர்க்​கார் ஆகிய இரு​வரை​யும் பணியி​ல் இருந்து விடு​வித்து தேர்​தல் ஆணை​யம் நேற்று உத்​தர​விட்​டது.

புதிய டிஜிபி​யாக சித் நாத் குப்​தா​வும் கொல்​கத்தா காவல் புதிய ஆணை​ய​ராக அஜய் குமார் நந்த் என்​பவரும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த உத்​தரவை உடனடி​யாக அமல்​படுத் ​து​மாறு மாநில அரசுக்கு தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. இது​ போல மேலும் சில அதி​காரி​களும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

‘சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான தயார் நிலை குறித்து ஆய்வு செய்த பின்​னரே இந்த மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. எனவே, பதவியி​ல் இருந்து நீக்​கப்​பட்ட அதி​காரி​கள், தேர்​தல் முடி​யும் வரை தேர்​தல் தொடர்​பான எந்​தப் பணி​களி​லும் பணி​யமர்த்​தப்​படக் கூடாது’ என்று தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நடவடிக்​கை​யைக் கண்​டித்து திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் மாநிலங்​களவை​யில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்​தனர்.

“தலை​மைச் செய​லர், உள்துறைச் செய​லரை நள்​ளிர​வில் பதவியி​ல் இருந்து நீக்​கியதை ஏற்க முடி​யாது’’ என்று அவர்கள் கூறினர். ‘‘தேர்​தலை நியாய​மாக நடத்த, தேர்​தல் ஆணை​யம்​உயர்​ அதி​காரி​களை ​மாற்​று​வது வழக்​க​மான நடவடிக்​கை​தான்’’​ என ​நா​டாளு​மன்​ற விவ​காரத்​ துறை அமைச்​சர்​ கிரண்​ ரிஜிஜு தெரி​வித்​​தார்​.

மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலர், டிஜிபி மாற்றத்துக்கு  திரிணமூல் கடும் கண்டனம்
மாநிலங்களவை தேர்தலில் நிதிஷ் குமார், பாஜக தலைவர் நிதின் நவீன் வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in