அசாம் மாநில திரிணமூல் தலைவர் அபிஜித் விலகல்

அபிஜித் மஜும்தார்

அபிஜித் மஜும்தார்

Updated on
1 min read

திஸ்பூர்: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. அதன்பின் திரிணமூல் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சாந்தனு சென் பதவியை ராஜினாமா செய்தார். திரிணமூல் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், தீய செயல்பாடுகள்,

ஆர்ஜி கர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கை கையாண்ட விதம் ஆகியவை உட்பட பல விஷயங்களை காரணம் கூறிய சாந்தனு பதவியை ராஜினாமா செய்வதாக மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் அசாம் மாநில திரிணமூல் காங்கிரஸ் தலைவராக இருந்த அபிஜித் மஜும்தார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் மம்தாவுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்காக மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் பணியாற்றியது. இதுபோன்ற சூழலில் என்னால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தொடர முடியாது’’ என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அபிஜித் மஜும்தார்</p></div>
ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in