

விஜயவாடா: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா டெல்லியில் நேற்று ராகுல் காந்தியை சந்தித்தார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள ஷர்மிளா, தனக்குமாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும்படி ராகுலிடம் கேட்டுக் கொண்டார். கர்நாடக மாநிலத்தில் ஏதாவது ஒரு இடத்தைதனக்கு ஒதுக்கி மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. மேலும் ராகுல் காந்தியும் ஆந்திராவில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ஒப்புக்கொண்டதாக ஷர்மிளா தரப்பில் கூறப்படுகிறது.