

திருமலை: ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ‘வெங்கடாத்ரி’ எனும் மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானம் இன்று அறிமுகம் செய்கிறது. இணைய வசதி இல்லாமலும் இந்த செயலி செயல்படும். திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக, புதிய செயலி அறிமுகமாகிறது.
‘வெங்கடாத்ரி’ எனும் செயலி மூலம் ‘கோவிந்தா’ எனும் வாய்ஸ் அஸிஸ்டெண்ட்டும் இதில் இணைத்துள்ளனர். இதற்கு இணைய வசதி தேவையில்லை. ஆஃப் லைனிலும் 24 மணிநேரமும் திருமலையில் செயல்படும். இ்ச்செயலியை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது. இச்செயலி வராத்திரி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான 16-ம் தேதி முதல் முழுமையாக செயல்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ள இந்த செயலியில், குடிநீர் எங்கு கிடைக்கும்? ‘கால் போலீஸ் ஸ்டேஷன்’ என்றதும் திருமலை போலீஸ் நிலையத்திற்கு போன்கால் போகும்.
வாகனத்தை ஓர் இடத்தில் ‘பார்க்கிங்’ செய்து விட்டு ‘மார்க் மைஸ்பாட்’ என நாம் பதிவிட்டு கொள்ளலாம். நாம் செல்ல வேண்டிய இடமெல்லாம் சுற்றி பார்த்து விட்டு, ‘மார்க் மை ஸ்பாட்’ மீண்டும் அழுத்தினால் நமது கார், அல்லது பைக்கை நிறுத்தி இருக்கும் இடத்தை இந்த செயலி வழிகாட்டும். இந்த செயலி தமிழ் உட்பட 5 மொழிகளில் செயல்படும்.