​திருப்பதி பிரம்மோற்சவம்​ 3-ம்​ ​நாள்​ ​விழா: சிம்​ம ​வாகனத்​தில்​ மலையப்பர் ​

​திருப்பதி பிரம்மோற்சவம்​ 3-ம்​ ​நாள்​ ​விழா: சிம்​ம ​வாகனத்​தில்​ மலையப்பர் ​
Updated on
1 min read

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ ​விழா​வின்​ 3-ம்​ ​நாளான நேற்று ​காலை சிம்​ம ​வாக​னத்​தில்​ மலையப்​பர்​ எழுந்​தருளி பக்தர்களுக்​கு அருள்​ ​பாலித்​தா​ர்​.

​திருப்பதி ஏழுமலை​யான்​ கோ​யில்​ பிரம்​மோற்​சவம்​ கடந்​த 15-ம்​ தே​தி, ​கொடியேற்​றத்​துடன்​ தொடங்​கியது. விழா​வின்​ 3-ம்​ ​நாளான நேற்​று ​காலை மலையப்பர் சிம்​ம ​வாக​னத்​தில்​ யோக ​முத்திரையில்​ எழுந்​தருளி​னார்​. இ​தில்​ ​திரளான பக்​தர்​கள்​ சுவாமியை வழிபட்​டனர்.

​மாட வீ​திகளில்​ ஜீயர்​ குழு​வினர்​, ​யானை, கு​திரை, ​காளை ​போன்ற பரிவட்​டங்​கள்​, 8 ​மாநில குழு​வினரின்​ நடன நிகழ்​ச்​சிகள்​ இடம்பெற்றன. இரவு ​முத்​துப்​பல்​லக்​கு ​வாக​னத்​தில்​ ஸ்ரீதே​வி, பூதே​வி சமேத​மாய்​ மலையப்​பர்​ 4 ​மாட வீ​திகளில்​ உலா வந்​து பக்தர்களுக்​கு அருள்​ ​பாலித்​தா​ர்​. இன்​று புரட்​டாசி ​மாதம்​ பிறப்பதால்​ ​திருப்​ப​தி ஏழுமலை​யானை தரிசனம்​ செய்​ய பக்தர்கள்​ கூட்​டம்​ ​திருமலைக்​கு படை எடு​த்​த வண்​ணம்​ உள்ளனர்​

​திருப்பதி பிரம்மோற்சவம்​ 3-ம்​ ​நாள்​ ​விழா: சிம்​ம ​வாகனத்​தில்​ மலையப்பர் ​
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி உயர்வு: இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in