அஜித் தோவலுக்கு திலகர் தேசிய விருது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்

அஜித் தோவலுக்கு திலகர் தேசிய விருது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலுக்கு புனே​வில் நேற்று லோக்​மான்ய தில​கர் தேசிய விருது வழங்கப்பட்டது.

சுதந்​திரப் போராட்ட வீரர் லோக்​மான்ய பால கங்​காதர் தில​கரின் 106-வது நினைவு தினத்தை முன்​னிட்​டு, தில​கர் அறக்​கட்​டளை சார்​பில் விருது வழங்​கும் நிகழ்ச்சி புனே​வில் நேற்று நடை​பெற்​றது. இந்த விருது, நாட்​டுக்கு சிறந்த பங்​களிப்பை அளித்த தனி​நபர்​களுக்கு வழங்​கப்​படு​கிறது.

தேசிய பாது​காப்பை வலுப்​படுத்​தி​ய​தில் அஜித் தோவலின் பங்​களிப்​புக்காக இந்த ஆண்டு அவர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​தாக அறக்​கட்​டளை தலை​வர் ரோஹித் திலக் அறி​வித்​தார். இந்த விருதை, தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலுக்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வழங்​கி​னார்.

இதுகுறித்து அஜித் தோவல், கூறும்போது, “தில​கரின் பெயரில் வழங்​கப்​படும் இந்த விருதை ஏற்​றுக்​கொள்​வ​தில் மிக​வும் நன்​றி​யுள்​ளவ​னாக இருக்​கிறேன். இதை பணிவுடன் ஏற்​றுக்​கொள்​கிறேன்” என்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில், மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ், துணை முதல்​வர்​கள் ஏக்​நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார் ஆகியோர் கலந்து கொண்​டனர். தேசிய பாது​காப்பு ஆலோ​சக​ராக மிக நீண்ட காலம் பணி​யாற்​றிய அஜித் தோவல், நாட்​டின் பாது​காப்பு உத்​தியை உரு​வாக்​கு​வ​தில் முக்​கிய பங்கு வகித்​துள்​ளார். மேலும் ஆபரேஷன் சிந்​தூர், பால​கோட் வான்​வழித் தாக்​குதல் உள்​ளிட்ட பல நடவடிக்​கை​களில் இவர்​ முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளார்.

அஜித் தோவலுக்கு திலகர் தேசிய விருது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்
வினாத்தாள் கசிவு தடுப்பு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்மு ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in