வினாத்தாள் கசிவு தடுப்பு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்மு ஒப்புதல்

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு

Updated on
1 min read

புதுடெல்லி: வி​னாத்​தாள் கசிவு தடுப்பு சட்​டத்​துக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

நீட் வினாத்​தாள் கசிவை கண்​டித்து நாடு முழு​வதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்துது வினாத்​தாள் கசிவை தடுக்க புதிய மசோதா நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி உறுதி அளித்​தார். இதன்​படி பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்த மசோதா 2026 மாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்​றப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து குடிய ரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்​காக புதிய சட்​டம் அனுப்​பப்​பட்​டது. இதை பரிசீலித்த குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்த சட்​டம் 2026-க்கு ஒப்​புதல் வழங்​கி​னார். இதுதொடர்​பான அரசாணையை மத்​திய சட்​டத் துறை வெளி​யிட்டு உள்​ளது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட், ஜேஇஇ, கியூட், நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ் நடத்தும் போட்டித் தேர்வுகள் புதிய சட்ட வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. வினாத்​தாள் கசி​வில் ஈடு​படும் தனி நபர்​களுக்கு 5 ஆண்​டு​கள் முதல் 10 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை​யும் ரூ.50 லட்​சம் வரை அபராத​மும் விதிக்​கப்​படும்.

குழு​வாக, கும்​பலாக வினாத்​தாள் கசி​வில் ஈடு​படும் நபர்​களுக்கு அதி​கபட்​ச​மாக 10 ஆண்​டு​கள் வரை சிறைத் தண்​டனை​யும் ரூ.10 கோடி வரை அபராத​மும் விதிக்​கப்​படும். வினாத்​தாள் கசிவு குற்​ற​வாளி​களின் சொத்​துகளும் பறி​முதல் செய்​யப்​படும்.

வினாத்​தாள் கசி​வால் பொதுத் தேர்வு அல்​லது நுழைவுத்​தேர்வு ரத்து செய்​யப்​பட்​டால் அந்த தேர்​வுக்​கான செல​வுத் தொகை முழு​வதும் சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​களிடம் இருந்து வசூல் செய்​யப்​படும். வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​களின் விசா​ரணையை 60 நாட்​களுக்​குள் போலீ​ஸார் நிறைவு செய்ய வேண்​டும். இதுதொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்க நாடு முழு​வதும் சிறப்பு விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். பல்​வேறு மாநிலங்​கள் தொடர்​பான வழக்கு என்​றால் மத்​திய அரசு சார்​பில் சிறப்பு அதிரடிப்​படை அமைக்​கப்​படும்.

<div class="paragraphs"><p>குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு</p></div>
CWG 2026: கண்ணிவெடியில் கால் இழந்த சோமன் ராணா பாரா தடகளத்தில் தங்கம் வென்று அசத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in