மணிப்பூரில் இரு குழுக்களிடையே மோதல் - மூவர் சுட்டுக் கொலை

மணிப்பூரில் இரு குழுக்களிடையே மோதல் - மூவர் சுட்டுக் கொலை
Updated on: 
1 min read

இம்பால்: மணிப்பூரில் இருவேறு குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் குகி சமூகத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மணிப்பூர் மாநிலத்தின் நோனி மாவட்டத்தில் உள்ள கெக்ரு நாகா கிராமத்தில் நடந்துள்ளது. அதிகாலை நேரத்தில் தொடங்கிய இந்த மோதல், பல மணி நேரம் நீடித்துள்ளது. இந்த சூழலில் சம்பவ இடத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு குகி சமூகத்தினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதற்கு நாகா ஆயுதக் குழுதான் காரணம் என்றும் குகி இன்பி மணிப்பூர் அமைப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு உரிய நீதி வேண்டும் என்று மாநில அரசை அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

மணிப்​பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்​டது. இதில் பலர் உயி​ரிழந்​தனர். ஆயிரக்​கணக்​கானோர் இடம் பெயர்ந்​தனர். பல மாதங்​களாக வன்​முறை நீடித்​த காரணத்​தால் கடந்த 2025 பிப்​ர​வரி​யில் குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமலுக்கு வந்தது.

பின்னர் மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலை​வர் யும்​நம் கேம்​சந்த் சிங் கடந்த பிப்ரவரி மாதம் பதவியேற்றார். இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை என்பதை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

மணிப்பூரில் இரு குழுக்களிடையே மோதல் - மூவர் சுட்டுக் கொலை
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஹார்மர் பந்துவீச்சில் வென்றது தென் ஆப்பிரிக்கா

X