

கொச்சி: கேரளம் மாநிலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட மூவர் உயிரிந்தனர்.
கேரளம் மாநிலம் கொச்சியில் உள்ள கைவினைப் பொருள் விற்பனை நிலையத்தில் வேலைபார்த்து வரும் தேவிகா (21), கோபிகா (22), இஜாஸ் (21) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேநீர் அருந்த மோட்டார் சைக்கிளில் சென்றனர். தேநீர் அருந்திவிட்டு தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
நெடும்பாசேரி அருகே உள்ள சாலையில் சென்றபோது, அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிவேகத்தில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சுஹைல் சஜீவ் (19) என்ற இளைஞரை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.