ஸ்ரீஹரிகோட்டாவில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் 3-ம் கட்ட இயந்திரம் வெற்றிகர பரிசோதனை

ஸ்ரீஹரிகோட்டாவில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் 3-ம் கட்ட இயந்திரம் வெற்றிகர பரிசோதனை
Updated on
1 min read

ஸ்ரீஹரிகோட்டா: சிறிய ரக செயற்​கைக்கோள்​களை விண்​ணில் ஏவுவதற்​காக எஸ்​எஸ்​எல்வி ராக்​கெட் உரு​வாக்​கப்​பட்​டது. இதில் 3ம் கட்ட இயந்​திரம் தற்​போது மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

திட எரிபொருளில் இயங்​கும் இந்த இயந்​திரம் ஆந்​தி​ரா​வின் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தில் நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது. இந்த திட எரிபொருள் இயந்​திரம் ராக்​கெட்​டுக்கு வினாடிக்கு 4 கி.மீ. வேகத்தை கொடுக்​கும். சிறிய ரக செயற்​கைக் ​கோள்​களை விண்​ணில் ஏவுவதற்​காக எஸ்​எஸ்​எல்வி ராக்​கெட் உருவாக்கப்பட்டது. இதில் 3-ம் கட்ட இயந்​திரம் தற்​போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

திட எரிபொருளில் இயங்​கும் இந்த இயந்​திரம் ஆந்​தி​ரா​வின் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தில் நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது. இந்த திட எரிபொருள் இயந்​திரம் ராக்​கெட்​டுக்கு வினாடிக்கு 4 கி.மீ. வேகத்தை கொடுக்​கும்.

எஸ்​எஸ்​எல்வி ராக்​கெட் திறம்பட செயல்​படும் வகை​யில் இதன் 3ம் கட்ட இயந்​திரத்​தில் உள்ள இக்​னைட்​டர், கூம்பு குழாய்​கள் ஆகிய​வற்​றின் வடிவம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த பரிசோதனை 108 வினாடிகள் நடை​பெற்​றது. இந்த சோதனை வெற்​றிகர​மாக அமைந்​ததன் மூலம், மேம்​படுத்​தப்​பட்ட 3-ம் கட்ட இயந்​திரம் ராக்​கெட்​டில் பொருத்த தகுதி பெற்​றுள்​ளது.

ஸ்ரீஹரி​கோட்​டா​வில் கடந்​தாண்டு ஜூலை மாதம் திட எரிபொருள் இயந்​திரம் தயாரிப்பு மையம் தொடங்​கப்​பட்​டது. உள்​நாட்டு தொழில்​ நுட்​பம் மூலம் 10 டன் எடை​யுள்ள திட எரிபொருள் கலவை இயந்​திரம் சதீ்ஷ் தவான் விண்​வெளி மையத்​தில் தொடங்கப்​பட்​டுள்ளது. இது உலகின் பெரிய திட எரிபொருள் கலவை இயந்​திரமாகும்.

சதீஷ் த​வான் விண்​வெளி மையத்​தில் அமைந்​துள்ள திட எரிபொருள் இயந்​திர தயாரிப்பு மையம் மற்​றும் பரிசோதனை மையம் மூலம் ஸ்டார்ட் அப் நிறு​வனம் முதல்​முறை​யாக ஏவவுள்ள முதல் ராக்​கெட்​டின் திட எரிபொருள் மோட்​டார்​ வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் 3-ம் கட்ட இயந்திரம் வெற்றிகர பரிசோதனை
போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகள் மோசடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in