தென்பெண்ணையாறு விவகாரம்: உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் - தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தென்​பெண்​ணை​யாறு நீர் பங்​கீட்​டுப் பிரச்​சினையைத் தீர்க்க உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் தீர்ப்​பா​யம் அமைக்க வேண்​டும், ஏற்​கெ​னவே பயன்​பாட்​டில் இல்​லாத மகதாயி நீர் தகராறு தீர்ப்​பா​யத்​திடம் வழக்கை ஒப்​படைக்​கக் கூடாது என தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் பிர​மாண பத்​திரம் தாக்​கல் செய்​துள்​ளது.

தென்​பெண்​ணை​யாற்​றின் குறுக்கே யர்​கோல் என்ற பகு​தி​யில் கர்​நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வந்​தது. அதற்கு தடை விதிக்​கக் கோரி தமிழக அரசு உச்ச நீதி​மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதிமன்​றம், இரு மாநிலங்​களுக்​கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்த மத்​திய அரசை அறி​வுறுத்​தி​யது. ஆனால் அந்த சமரச பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை.

இதனையடுத்​து, தமிழகம் மற்றும் கர்​நாடகா இடையே​யான தென்​பெண்​ணை​யாறு நீர் பிரச்​சினையைத் தீர்ப்​ப​தற்​காக தனித் தீர்ப்​பா​யம் அமைக்க மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்​தது. இந்​நிலை​யில், தென்​பெண்​ணை​யாறு நீர் பிரச்​சினை யைத் தீர்க்​கப் புதிய தீர்ப்​பா​யம் அமைப்​ப​தற்​குப் பதிலாக, ஏற்​கெ​னவே பயன்​பாட்​டில் இல்​லாமல் இருக்​கும் மகதாயி நீர் தகராறு தீர்ப்​பா​யத்​திடம் வழக்கை ஒப்​படைக்​கக்​கோரி மத்​திய அரசு புதிய மனுவை உச்ச நீதி​மன்றத்​தில் தாக்​கல் செய்​திருந்​தது. அந்த மனுவை விசா​ரித்த உச்​சநீ​தி​மன்​றம், இது தொடர்​பாக தமிழக மற்​றும் கர்​நாடக மாநில அரசுகள் பதிலளிக்க கடந்த மாதம் உத்​தர​விட்​டது.

தனித் தீர்ப்​பா​யம் வேண்​டும்: அதன்​படி, தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் பிர​மாண பத்​திரம் தாக்​கல் செய்​துள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​பெண்​ணை​யாறு நீர் பங்​கீடு விவ​காரத்தை மகதாயி தீர்ப்​பா​யத்​திற்கு மாற்​றக் கூடாது. தனித் தீர்ப்​பா​யம் அமைக்க வேண்​டும். நிரந்​தர​மான தனித் தீர்ப்​பா​யம் அமைப்​பது மட்​டுமே சரி​யான தீர்​வாக அமை​யும், ஏற்​கெ​னவே உள்ள தீர்ப்​பா​யத்​தைப் பயன்​படுத்தும் போது அதன் தலை​வர்​கள் மற்​றும் உறுப்​பினர்​கள் நியமனத்​தில் பல்​வேறு சட்ட சிக்​கல்​கள் ஏற்​படும்.

குறிப்​பாக, மகதாயி தீர்ப்​பா​யத்​தில் இருக்​கும் தலை​வர் மற்​றும் உறுப்​பினர்​கள் ஓய்வு பெற்ற நீதித்​துறை அதி​காரி​கள் ஆவார்​கள். எனவே, பதவி​யில் உள்ள உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில், இரண்டு உயர் நீதி​மன்ற நீதிப​தி​களை உறுப்​பினர்​களாக நியமித்து புதி​தாக தீர்ப்​பா​யம் அமைக்க வேண்​டும். அல்​லது உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தியை தலை​வ​ராகக் கொண்​டு, இரண்டு உயர் நீதி​மன்ற நீதிப​தி​களை உறுப்​பினர்​களாக கொண்டு 2 மாதத்​துக்​குள் தீர்ப்​பா​யம் அமைக்க வேண்​டும். இவ்​வாறு தமிழக அரசு பிர​மாண பத்​திரத்​தில்​ வலியுறுத்​தி உள்​ளது.

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
நீட் தேர்வு ரத்து, வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: பேரவையில் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in