“மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்” - முதல்வர் சுவேந்து அதிகாரி

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

கொல்கத்தா: குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையைப் பின்பற்றி மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இதற்கென ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அதை சட்டப்பேரவையில் நான் விளக்குவேன். ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையைப் பின்பற்றி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை வரும் திங்கள் கிழமை சட்டப்பேரவையில் நான் தெரிவிப்பேன்.

மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய அரசில் ஊழலும், வாரிசு அரசியலும்தான் மேற்கு வங்கத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டன. இதன் காரணமாக மாநிலம் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திரர் போன்ற ஆளுமைகளின் பாரம்பரியத்தை முன்னிறுத்துவது அவர்களின் செயல்திட்டமாக இருக்கவில்லை.

இப்போது ஒரு தேசியவாத அரசு ஆட்சியில் உள்ளது. எனவே, இத்தகைய பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும். இந்த ஆண்டு வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டாகும். இதற்காக பட்ஜெட்டில் ஒரு முக்கிய முன்னெடுப்பை நாங்கள் அறிவித்துள்ளோம். வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டைக் குறிக்கும் வகையில், தேசிய அளவிலான அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பது குறித்து அறிவிக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

நம் நாட்​டில் பொது சிவில் சட்​டம் தற்​போது கோவா, உத்தராகண்ட், குஜ​ராத், அசாம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் அதி​காரப்​பூர்​வ​மாக நடை​முறை​யில் உள்​ளது அல்லது சட்​ட​மாக இயற்​றப்​பட்​டுள்​ளது. இதில் சில மாநிலங்​கள் ஏற்​கெனவே சட்​டத்தை அமல்​படுத்​தி விட்ட நிலை​யில், மற்றவை அதற்​கான இறுதிக் கட்​டப்​ பணி​களை மேற்​கொண்டு வருகின்றன. மகா​ராஷ்டி​ரா​விலும் பொது சிவில் சட்​டத்​தைக் கொண்டு வர அந்த மாநில அரசு திட்டமிட்​டுள்​ளது.

இது குறித்து கடந்த 23-ம் தேதி அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய மகா​ராஷ்டிர மாநில உள்​துறை இணை அமைச்​சர் யோகேஷ் கதம், “மகாராஷ்டி​ரா​வில் பொது சிவில் சட்​டத்​தைக் கொண்டு வரு​வ​தில் 100% உறு​தி​யாக உள்​ளோம். இதற்​கான வரைவு மசோ​தா​வைத் தயாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

வரைவு மசோ​தா​வை தயாரிப்​ப​தற்​கான பணி​களில் இந்​தக் குழு தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. இந்த சட்​டம் மூலம் பலதார மணம் தடை செய்​யப்​படும். இந்​தச் சட்​டம் அமலுக்கு வரும்​போது பலதார மணம் செய்​பவர்​களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்​டனை விதிக்க வழி ​வகை செய்​யப்​படும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மேற்கு வங்க மாநில அரசும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் ‘எமர்ஜென்சி’ குறித்த பாடம் அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in