‘இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்​தின் முதற்கட்​டம் தயார்’

‘இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்​தின் முதற்கட்​டம் தயார்’
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையி​லான இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதற்​கட்ட பகுதி இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்​போது, “இந்​தி​யா-அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதற்​கட்ட பகுதி இறுதி செய்​யப்​பட்டு தயார் நிலை​யில் உள்​ளது. தற்​போது அதற்​கான சட்டப்​பூர்வ வரைவு தயாரிப்​புப் பணி​கள் நடை​பெற்று வருகின்றன.

மேலும், இந்​தி​யா, ஐரோப்​பிய யூனியன் இடையி​லான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் வரும் டிசம்​பர் மாதத்​தில் கையெழுத்​தாக உள்ளது. இதையடுத்​து, அந்த ஒப்​பந்​தம் அடுத்த ஆண்​டின் பிப்ரவரி அல்​லது மார்ச் மாதத்​தில் அமலுக்கு வரும்” என்​றார்.

முன்​ன​தாக, மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், இந்​தி​ய-அமெரிக்க வர்த்​தகப் பேச்​சு​வார்த்​தை​யில் சற்று தேக்​கநிலை காணப்​படு​வ​தாக கூறிய நிலை​யில் பியூஷ் கோயல் இந்த முக்​கிய அறி​விப்பை வெளி​யிட்​டுள்​ளார். மேலும், அமெரிக்க வர்த்தக ஒப்பந்​தப் பேச்​சு​வார்த்​தைகள் சரி​யான பாதை​யில் சென்று கொண்​டிருப்​ப​தாக மத்​திய வர்த்​தகத் துறை செயலர் ராஜேஷ் அகர்​வாலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்​தின் முதற்கட்​டம் தயார்’
தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: எங்கெல்லாம் மிக கனமழை, கனமழை வாய்ப்பு?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in