கரு​வில் பாலினத்தை கண்டறியும் பரிசோதனை: போலீஸ் நேரடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

கரு​வில் பாலினத்தை கண்டறியும் பரிசோதனை: போலீஸ் நேரடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
Updated on
1 min read

புதுடெல்லி: கரு​வில் பாலினத்​தைக் கண்​டறி​யும் வழக்​கு​களில் காவல் துறை நேரடி​யாக விசா​ரணை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்​துள்​ளது.

உத்​தர பிரதேசத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் ஒரு​வர் மீது, கடந்த 2017-ம் ஆண்டு அம்​மாநில தாசில்​தார் அளித்த புகாரின் பேரில் காவல் துறை​யினர் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இதை ரத்து செய்​யக் கோரி தாக்​கல் செய்​யப்பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த உச்ச நீதிமன்ற நீதிப​தி​கள் சஞ்​சய் கரோல், என்​.கே. சிங் அடங்​கிய அமர்வு தங்​கள் தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

பாலினத் தேர்வு தடைச் சட்​டத்தின் கீழ் காவல் துறை முதன்மை விசா​ரணை அமைப்​பாகச் செயல்பட முடி​யாது.

இந்​தச் சட்​டத்​தின் கீழ் நியமிக்​கப்​பட்​டுள்ள சட்​டப்​பூர்வ அதி​காரி மட்டுமே புகார் அளிக்​கவோ விசா​ரணை நடத்​தவோ முழு அதி​கார​மும் படைத்​தவர் ஆவார்.

மருத்​துவ தொழில்​நுட்​பம் சார்ந்த வழக்​கு​கள் என்​ப​தால், இவற்றை நேரடி​யாகக் கையாள காவல் துறை முதன்மை அமைப்பு அல்ல. சட்​டப்​பூர்வ அதி​காரி உதவி கோரும்​பட்​சத்​தில் மட்​டுமே காவல் துறை ஒரு துணை அமைப்​பாகச் செயல்பட முடி​யும்.

காவல் துறை தாக்​கல் செய்​யும் இறுதி குற்​றப்​பத்​திரி​கை​யின் அடிப்​படை​யில் வழக்கு வி​சா​ரணையை மேற்​கொள்ள முடி​யாது. இவ்​வாறு கூறப்பட்டுள்ளது.

கரு​வில் பாலினத்தை கண்டறியும் பரிசோதனை: போலீஸ் நேரடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: கிறிஸ்தவ மத போதகருக்கு 4 தூக்கு தண்டனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in