“அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து

“அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: அமித் ஷாவின் பெயரைக் கேட்​டாலே தீவிர​வா​தி​கள் அஞ்சி நடுங்​கு​வார்​கள் என்று மக்களவை​யில் மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​தார்.

டெல்லியில் மாணவர்​கள் மீது தடியடி நடத்​தப்​பட்​டது தொடர்​பாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அவை​யில் விளக்​கம் அளிக்க வேண்​டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலி​யுறுத்​தினர்.

இதுதொடர்​பாக நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறிய​தாவது: மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நாடாளு​மன்​றத்​துக்கு காலை​யில் வரு​கிறார். இரவில்​தான் அவர் வீடு திரும்​பு​கிறார். மத்​திய அமைச்​சர் அமித் ஷாவின் பெயரைக் கேட்​டாலே தீவிர​வா​தி​கள் அஞ்சி நடுங்​கு​வார்​கள். அவை​யில் விவாதம் நடத்​தப்​பட்டு அமைச்​சர் அமித் ஷா பதில் அளித்​தால் உங்​களால் அவரை எதிர்​கொள்ள முடி​யாது.

குறிப்​பிட்ட ஓர் அமைச்​சர் அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்​டும் என்று எதிர்க்​கட்​சிகளால் உத்​தர​விட முடி​யாது. ஓர் அமைச்​சர் அவை​யில் விளக்​கம் அளிப்​பது குறித்து சபா​நாயகர் மற்​றும் மத்திய அரசால் மட்​டுமே முடிவு எடுக்க முடி​யும். இவ்​வாறு அமைச்​சர்​ தெரி​வித்​தார்​.

“அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து
ஜனநாயகக் குரலாக ‘ஜந்தர் மந்தர்’ மாறியது எப்படி? - டெல்லி போராட்டக் களத்தின் கதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in