7 மாநிலங்களில் தீவிரவாத சதி திட்டம் அம்பலம்: விஜயவாடாவில் கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை

7 மாநிலங்களில் தீவிரவாத சதி திட்டம் அம்பலம்: விஜயவாடாவில் கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
Updated on
1 min read

விஜயவாடா: ஆந்​திர மாநிலம் விஜய​வா​டா​வில் ஐஎஸ்​ஐஎஸ் தீவிரவாத அமைப்​புடன் தொடர்பு வைத்​திருந்​த​தாக 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இது குறித்து விஜய​வாடா போலீ​ஸார் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: டெல்​லி, ராஜஸ்​தான், பிஹார், தெலங்​கானா ஆகிய 4 மாநிலங்​களைச் சேர்ந்த 42 பேர் ஒன்று கூடி ரகசி​ய​மாக வாட்​ஸ்​-அப் குரூப் நடத்தி வரு​கின்​றனர். இதில் எடுக்​கப்​படும் சில நடவடிக்​கைகள், ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புக்கு அனுப்பப்படு​கின்​றன. அவர்​கள் மீண்​டும் இதில் ஒரு​வருக்கு தரும் உத்தரவை இந்த 42 பேரும் பின்​பற்றி வரு​கின்​றனர்.

இவர்​கள் அனை​வரும் `அல் மாலிக் இஸ்​லாமிக் யூத்’ எனும் பெயரில் ஓர் அமைப்​பாக, ரகசி​ய​மாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இந்​தி​யாவை ஒரு இஸ்​லாமிய நாடாக மாற்ற வேண்​டும் என்​பதே இவர்​களின் பிர​தான கொள்​கை​யாகும். பாகிஸ்​தான், ஆப்கானிஸ்​தானில் உள்ள தீவிர​வாத அமைப்​பு​களுக்​கும் இவர்களுக்​கும் தொடர்பு இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​து உள்ளது.

இங்​குள்ள இளைஞர்​களுக்கு மூளைச் செலவு செய்​து, சில இஸ்லாமிய நாடு​களுக்கு அனுப்பி வைத்​து, அங்கு ஆயுத பயிற்சி அளித்து மீண்​டும் நம் நாட்​டுக்கே அனுப்பி வைப்​பார்​கள். சமயம் பார்த்து தீவிர​வாத செயலில் ஈடுபட வைப்​பார்​கள். இது​தான் இந்த அமைப்​பின் வேலை.

கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் இருந்து கைப்பற்​றப்​பட்ட செல்​போன்​கள், எலக்ட்​ரானிக் பொருட்​கள் போன்​றவற்​றில் இருந்து பல ஆடியோ, வீடியோ மெசேஜ்கள் மூலம் போலீ​ஸாருக்கு இந்த விவரங்​கள் தெரிய​வந்​துள்​ளன.

மேலும், இதில் ஈடு​பட்​டுள்ள 42 பேர் விஜய​வாடா உட்பட 7 மாநில நகரங்​களில் பயங்கர சதி திட்​டத்​தைத் தீட்​டி​யுள்​ளனர். ஆதலால், மீத​முள்​ளவர்​களை பிடிக்க பல மாநிலங்​களுக்கு போலீ​ஸார் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளனர். மேலும், இதுதொடர்​பாக தேசிய புல​னாய்வு அமைப்​புக்​கும்​(என்​ஐஏ) தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்​வாறு போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

7 மாநிலங்களில் தீவிரவாத சதி திட்டம் அம்பலம்: விஜயவாடாவில் கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in