தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜூனில் அதிக வெப்பம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தூத்துக்குடி |கோப்புப் படம்

தூத்துக்குடி |கோப்புப் படம்

Updated on
2 min read

புதுடெல்லி: ஜூன் 2026-ல் நாடு முழுவதற்குமான சராசரி மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால், தமிழ்நாட்டின் சில பகுதிகள் உள்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக நிலவ வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2021-ம் ஆண்டு முதல் இந்திய வானிலை ஆய்வுத் துறை, நாடு முழுவதும் மழைப்பொழிவு, வெப்பநிலை ஆகியவை தொடர்பான முன்னறிவிப்புகளை மாதாந்திர, பருவகால அடிப்படையில் வெளியிடுவதற்கு ஒரு புதிய உத்தியைப் பயன்படுத்தி வருகிறது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட பல்வகை மாதிரி ஒருங்கிணைப்பு முன்னறிவிப்பு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

2026-ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) முதல் கட்ட கணிப்பை கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம், தற்போது இரண்டாம் கட்ட முன்னறிவிப்புகளைத் தயாரித்துள்ளது.

அதன்படி, 2026-ம் ஆண்டில் நாடு முழுவதற்குமான தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் (ஜூன் - செப்டம்பர்) மழைப்பொழிவானது, நீண்ட கால சராசரியில், 90 சதவீதமாக ஆக இருக்க வாய்ப்புள்ளது.

வடமேற்கு, வடகிழக்கு இந்தியா, தீபகற்ப இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், கிழக்கு - மத்திய இந்திய பகுதிகள் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில தனித்த பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு, விவசாயம், நீர் இருப்பு, நீர்மின் உற்பத்தி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் சவால்களை ஏற்படுத்தக்கூடும். அத்துடன், வறட்சி, வெப்ப அழுத்தம், குடிநீர் ஆதாரங்களுக்கான நெருக்கடி போன்ற அபாயங்களையும் இது அதிகரிக்கும்.

இந்த பாதிப்புகளைக் குறைப்பதற்கு, திறமையான நீர் வள மேலாண்மை, நீர் சேமிப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல், விவசாயத்திற்கான அவசரகாலத் திட்டமிடல், வறட்சி கண்காணிப்பை வலுப்படுத்துதல், வானிலை ஆய்வு மையத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை சேவைகளைப் பயன்படுத்துதல் போன்ற ஆயத்த நடவடிக்கைகளை கையாளலாம்.

2026 ஜூன் மாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் நாடு முழுவதுக்குமான சராசரி மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாகவே அதாவது, நீண்ட கால சராசரியில் 92%-க்கும் குறைவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஜூன் 2026-ல், மத்திய, வடமேற்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளது. ஜூன் 2026-ல், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், பிஹார், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகள், மகாராஷ்டிரா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாட்டின் சில பகுதிகள் ஆகியவற்றில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>தூத்துக்குடி |கோப்புப் படம்</p></div>
திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷுக்கு இந்து முன்னணி பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in