‘தெலங்கானா ரக்‌ஷன சேனா’: கவிதா கட்சிப் பெயர் மாறியது

‘தெலங்கானா ரக்‌ஷன சேனா’: கவிதா கட்சிப் பெயர் மாறியது
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்​கானா முன்​னாள் முதல்​வரும், பிஆர்​எஸ் கட்​சி​யின் தலை​வரு​மான கே.சந்​திரசேகர ராவின் மகள் கவி​தா. நிஜா​மா​பாத் மக்​களவை உறுப்​பினர், தெலங்​கானா மேலவை உறுப்​பினர் உள்​ளிட்ட பொறுப்​பு​களை வகித்​துள்​ளார்.

குடும்ப பிரச்​சினை​ காரண​மாக பிஆர்​எஸ் கட்​சியை விட்டு வில​கி​னார். கடந்த 25-ம் தேதி தெலங்​கானா ராஷ்டிர சேனா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்​கி​னார். தேர்​தல் ஆணை​யத்​தின் பதிவுக்​காக 5 பெயர்​களை பரிந்​துரை செய்​திருந்​தார். இதில் தெலங்​கானா ரக்‌ஷன சேனா என்ற பெயர் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக தேர்​தல் ஆணை​யத்​திடம் இருந்து நேற்று கடிதம் வந்​துள்​ளது.

இதனை கவிதா ‘எக்​ஸ்’ தளத்​தில் தெரி​வித்​துள்​ளார். அப்​ப​தி​வில் டிஆர்​எஸ் எனும் பெயர் மீண்​டும் வந்​ததற்கு கடவுளுக்கு நன்றி தெரி​விப்​ப​தாக அவர் கூறி​யுள்​ளார்.

கட்​சி​யின் இப்​பெயர் குறித்து இன்​னும் 30 நாட்​கள் வரை யாரிட​மிருந்​தும் எவ்​வித ஆட்​சேப​மும் வரவில்லை எனில், இந்​தப் பெயரே கட்​சி​யின் பெய​ராக அதி​காரப்​பூர்​வ​காக அறிவிக்​கப்​படும் என தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

‘தெலங்கானா ரக்‌ஷன சேனா’: கவிதா கட்சிப் பெயர் மாறியது
நிதின் நவீன் தலைமையில் பாஜகவில் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீட்டுடன் புதிய அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in