

ஹைதராபாத்: தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும்வரை பாத யாத்திரை மேற்கொள்வேன் என்று பாஜக எம்பி ஈடல ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவின் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக பாஜக எம்பி ஈடல ராஜேந்தர் குற்றம் சாட்டி வருகிறார். ஹைதராபாத் ஜவஹர்நகர் குப்பை கிடங்கை அகற்றக் கோரி கடந்த 27-ம் தேதி அவர் பாத யாத்திரையை தொடங்கினார். மொத்தம் 60 கி.மீ. தொலைவை அவர் கடந்து உள்ளார்.
இதுகுறித்து ஈடல ராஜேந்தர், “தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி ஆட்சி வீழும் வரை தொடர்ந்து பாத யாத்திரை மேற்கொள்வேன். எனக்கு வேறு வேலை இல்லை என்பதால் பாதயாத்திரை மேற்கொள்வதாக காங்கிரஸார்் கூறுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி கவிழும் வரை இந்த வேலையை தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்தார்.
அமித் ஷாவின் பாத யாத்திரை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் நவம்பர் 2-ம் தேதி ஹைதராபாத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். ‘ஜனநாயகத்தை காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்’ என்கிற முழக்கத்துடன் இந்த பாத யாத்திரை நடைபெற உள்ளது. தெலங்கானாவில் பாத யாத்திரை மூலம் பலர் ஆட்சியைப் பிடித்துள்ள தால் பாஜக-வும் பாதயாத் திரை அரசியலை கையிலெடுத் துள்ளது.