8-வது உலக திருக்குறள் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும்: அமைச்சரிடம் தமிழ் அமைப்பு கோரிக்கை

8-வது உலக திருக்குறள் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும்: அமைச்சரிடம் தமிழ் அமைப்பு கோரிக்கை
Updated on: 
1 min read

பெங்களூரு: இலங்கை பெருந்​தோட்ட மற்​றும் சமூக உட்கட்டமைப்பு வசதி​கள் துறை அமைச்​சர் சுந்​தரலிங்​கம் பிரதீப் நேற்று கர்​நாடக மாநிலம் பெங்​களூரு வந்​திருந்​தார். அவரை தாய்​மொழி கூட்​டமைப்பு மற்​றும் திரு​வள்​ளுவர் சங்​கத்​தின் தலை​வர் எஸ்.டி.குமார் தலை​மையில் 10-க்​கும் மேற்​பட்ட தமிழ் அமைப்பினர் சந்​தித்து பேசினர்.

அப்​போது எஸ்.டி.குமார் கூறுகை​யில், “கடந்த ஜூலை 5-ம் தேதி பெங்​களூரு​வில் ஏழாவது திருக்​குறள் மாநாட்டை நடத்​தினோம். அதில் இந்​தி​யாவை சேர்ந்​தவர்​கள் மட்​டுமல்​லாமல் இலங்கை, சிங்​கப்​பூர், மலேசியா உள்​ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர். எட்​டாவது உலக திருக்​குறள் மாநாட்டை இலங்கை அரசு சார்​பில் இலங்​கை​யில் உள்ள பல்​கலைக்கழகத்​தில் நடத்த வேண்​டும். அதற்கு கர்​நாடக தமிழ் அமைப்​பினர் உறுதுணை​யாக இருப்​பார்​கள்” என்​றார்.

இதற்கு இலங்கை அமைச்​சர் சுந்​தரலிங்​கம் பிரதீப் பதிலளிக்கையில், “உங்​களின் கோரிக்கை குறித்து எங்​களது நாட்டு அரசுடன் கலந்து பேசி முடிவெடுக்​கப்​படும். எட்​டாவது உலக திருக்​குறள் மாநாட்டை இலங்​கை​யில் நடத்​து​வது குறித்து நல்ல முடிவை எதிர்பார்க்​கலாம்” என உறுதி​ அளித்​தார்.

8-வது உலக திருக்குறள் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும்: அமைச்சரிடம் தமிழ் அமைப்பு கோரிக்கை
உ.பி. தொகுதி பங்கீடு: 130 சீட் கேட்கும் காங்கிரஸ் - 26 ஒதுக்க முன்வரும் சமாஜ்வாதி

X