

ஐ.ஜி.பி.சுந்தர்ராஜ்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் சரக காவல் துறை ஐ.ஜி.பி. சுந்தர்ராஜ் கூறியதாவது: பஸ்தர் சரகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இருந்து சரணடைந்த 18 மாவோயிஸ்ட்கள் காங்கர் வனப்போர் பயிற்சி (சிடிஜேடபிள்யூ) கல்லூரியில் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்தபோது வெடிகுண்டுகளைக் கையாள்வதிலும், மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் கையாளும் தந்திரோபாயங்களை முறியடிக்க, தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுந்தர்ராஜ் கூறினார்.