பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கர்நாடக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி

பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கர்நாடக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
Updated on: 
1 min read

புதுடெல்லி: கர்நாடகாவில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்​டது.

கர்நாடக அரசு பைக் டாக்ஸி கொள்கையை வெளி​யிடும் வரை, அச்​சேவை​களை நிறுத்​து​மாறு கர்நாடகா உயர் நீதி​மன்ற தனி நீதிபதி உத்​தர​விட்​டிருந்​தார். இதை எதிர்த்து ஓலா, ஊபர், ராபிடோ, மோட்​டார் சைக்​கிள் உரிமையாளர்​கள் மற்​றும் பைக் டாக்ஸி நலச் சங்கம் மேல்​முறையீடு செய்தது.

அதனை விசா​ரித்த கர்​நாடக உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு அமர்வு, தனி நீதிபதி உத்​தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கர்​நாடக அரசு தாக்​கல் செய்த மேல்​முறையீட்டு மனு, உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சதீஷ் சந்​திர சர்மா, என். கோட்​டீஸ்​வர் சிங் அமர்​வில் விசா​ரணைக்கு வந்த போது, “பைக் டாக்ஸிகளைத் தடை செய்​வதைவிட உரிய விதிமுறைகளை உரு​வாக்கி முறைப்​படுத்​து​வதே சிறந்​தது.

பைக் டாக்ஸி மலிவான கட்​ட​ணம் என்​ப​தால் லட்சக்கணக்கானோர் பயனடைந்து​ வரு​கின்​றனர். மத்​திய அரசும் தடையில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க முடி​யாது” என்று கூறி மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர்.

பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கர்நாடக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
அரிசி இருப்பு வரம்பை உயர்த்த வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை

X