​வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி​கள் - மத்திய அரசு பரிசீலிக்க உச்ச நீதி​மன்​றம் உத்தரவு

​வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி​கள் - மத்திய அரசு பரிசீலிக்க உச்ச நீதி​மன்​றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​களை எண்​ணுவதற்​கு, ‘டோட்டலைசர்’ கருவி​களை பயன்படுத்​து​வது குறித்து பரிசீலிக்​கு​மாறு மத்​திய அரசுக்​கு, உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

வாக்​குப்​ப​தி​வின்​போது குறிப்​பிட்ட வாக்​குச்​சாவடி​யில் எந்​தக் கட்சிக்கு எவ்​வளவு வாக்​கு​கள் கிடைத்தன என்​பதை அறிந்​து கொள்​வ​தால், தேர்​தலுக்​குப் பிந்​தைய வன்​முறை​கள் மற்​றும் வாக்காளர்​கள் அச்​சுறுத்​தலுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்​டும். அதற்​காக 14 மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களை ஒன்​றாக இணைத்​து, மொத்​த​மாக வாக்​கு​களை எண்​ணும் ‘டோட்​டலைசர்’ கருவி​களை அறி​முகப்​படுத்த வேண்​டும் எனக் கோரி யோகேஷ் குப்தா என்​பவர் சார்​பில், வழக்​கறிஞர் அஸ்​வினிகு​மார் உபாத்யாய் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் அஸ்​வினிகு​மார் உபாத்​யாய் மற்​றும் மூத்த வழக்​கறிஞர் கோபால் சங்​கர​ நா​ராயணன் ஆகியோர் வாதிடும்​போது, “வாக்​காளர்​களின் தனி உரிமை​யைப் பாது​காக்​க​வும், தேர்தலுக்​குப் பிந்​தைய வன்​முறை​களைத் தடுக்​க​வும் வாக்கு எண்ணிக்​கைக்​காக உலகள​வில் டோட்​டலைசர் முறை பயன்​படுத்​தப்​படு​கிறது.

கடந்த 2018-ல் தேர்​தல் ஆணை​யமே டோட்​டலைசர்​களை அறிமுகப்​படுத்​தும் காலம் வந்​து​விட்​டது என நீதி​மன்​றத்​தில் கூறியிருந்​தது. மேலும், தேர்​தல் நடத்தை விதி​கள் பிரிவு 169-ன் கீழ் மத்​திய அரசு தேர்​தல் ஆணை​யத்​துடன் ஆலோ​சித்து விதி​களைத் திருத்த முடி​யும் என்​ப​தால், நாடாளு​மன்​றத்​தில் புதிய சட்​டம் இயற்ற வேண்​டிய அவசி​யமில்​லை” எனத் தெரி​வித்​தனர்.

தேர்​தல் ஆணை​யம் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, “படிவம் 17-சி மூலம் வாக்கு எண்​ணிக்​கை​யின் போது முகவர்​கள் சரி​பார்க்​கும் நடை​முறை, டோட்​டலைசர் பயன்படுத்​தி​னால் சாத்​தி​யப்​ப​டாது. ஒப்​பு​கைச் சீட்டு சரிபார்ப்பதி​லும் சிக்​கல்​கள் ஏற்​படும். இந்த விவ​காரத்​தில் தேர்தல் ஆணை​யம் பரிந்​துரை மட்​டுமே செய்ய முடி​யும், தேர்​தல் நடத்தை விதி​களில் சட்​டப்​பூர்வ திருத்​தம் கொண்டு வரும் அதிகாரம் மத்​திய அரசிடமே உள்​ளது” என கூறி​னார்.

இதையடுத்து நீதிப​தி​கள், “டோட்​டலைசர் கரு​வியை முற்​றி​லு​மாக நிராகரிக்​காமல், அதில் உள்ள நடை​முறைச் சிக்​ககல்​களையே தேர்​தல் ஆணை​யம் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது. எனவே, வாக்கு எண்ணிக்​கைக்கு டோட்​டலைசர் கருவி​களை அறிமுகப்படுத்துவது தொடர்​பாகத் தேர்​தல் நடத்தை விதி​களில் தேவை​யான திருத்​தங்​களை மேற்​கொள்​வது குறித்து மத்​திய அரசு பரிசீலிக்க வேண்​டும். இது தொடர்​பாக, தேர்​தல் ஆணை​யம் உரிய பரிந்​துரையை மத்​திய அரசுக்கு உடனடி​யாக அனுப்ப வேண்​டும். அதனை மத்​தி​ய அரசு பரிசீலிக்​க வேண்​டும்" என உத்தரவிட்டனர்,

​வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி​கள் - மத்திய அரசு பரிசீலிக்க உச்ச நீதி​மன்​றம் உத்தரவு
கேமரா இல்லாத போன்களுக்கு கோயில்களில் அனுமதி: அமைச்சர் ரமேஷ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in