வழக்குகளை ஒன்றாக விசாரிக்க கோரும் சைபர் குற்றவாளி மனு தள்ளுபடி

வழக்குகளை ஒன்றாக விசாரிக்க கோரும் சைபர் குற்றவாளி மனு தள்ளுபடி
Updated on
1 min read

புதுடெல்லி: அப்​பாவி முதலீட்​டாளர்​களை மோசடி செய்​யும் சைபர் குற்​ற​வாளி​கள் ஒட்​டுண்​ணி​கள் என்று தெரி​வித்த உச்ச நீதிமன்​றம், அவர்​களிடம் கடுமை​யாக நடந்து கொள்ள வேண்டியுள்​ளது என்​றும் குறிப்​பிட்​டுள்​ளது.

சைபர் குற்ற வழக்​கில் பிஹாரின் பாட்​னா, ஜம்​மு-​காஷ்மீரின் ஜம்மு, தமிழ்​நாட்​டின் திருப்​பூர் ஆகிய பகு​தி​களில் பதிவு செய்யப்பட்​டுள்ள வழக்​கு​களை ஒன்​றாக இணைக்​கக் கோரி பிஹாரை சேர்ந்த மனோஜ் குமார் சிங் தாக்​கல் செய்த ரிட் மனுவை உச்​ச நீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்​யகாந்த், நீதிபதி வி.மோகனா அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது.

மனு​தா​ரர் சார்​பில் வழக்​கறிஞர் அனில் நாக் முன் வைத்த வாதத்தை நிராகரித்த நீதிப​தி​கள், "உங்​களைப் போன்ற சைபர் குற்​ற​வாளி​கள் ஒட்​டுண்​ணி​களாக இருந்து கொண்டு அப்​பாவி முதலீட்​டாளர்​களை ஏமாற்​றுகிறீர்​கள். தமிழ்​நாட்​டில் ஒரு​வரை ஏமாற்​றி​விட்டு ஜம்​மு- ​காஷ்மீர் செல்​வது. பிறகு அங்​கும் ஏமாற்​றி​விட்டு வடகிழக்கு மாநிலங்​களுக்​குச் செல்​வதை வாடிக்​கை​யாகக் கொண்​டுள்​ளார்​கள்.

சைபர் குற்​றங்​களால் நாடு முழு​வதும் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உள்ளனர். இது போன்ற சைபர் குற்​ற​வாளி​கள் சிறை​யில் அடைக்கப்​பட்​டிருப்​பது சமூகத்​துக்கு நலன் பயக்​கும். தேவைப்பட்டால் அந்​தந்த மாநிலங்​களில் உள்ள உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடலாம்" என்று குறிப்​பிட்டு மனு​வைத்​ தள்​ளு​படி செய்​தனர்​.

வழக்குகளை ஒன்றாக விசாரிக்க கோரும் சைபர் குற்றவாளி மனு தள்ளுபடி
நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in